தற்போது மக்களிடையே வெள்ளித்திரையில் வெளிவரும் திரைப்படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான் வெகு பிரபலமாக உள்ளது. இதற்கு காரணம் படங்களை தாண்டி தொடர்கள் மக்கள் மத்தியில் பெரிதளவில் பார்க்கபடுவதோடு அது இல்லதரசிகளிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இந்நிலையில் பல முன்னணி தொலைக்காட்சி சேனல்கள் தொடர்களை மையமாக வைத்தே இயங்கி வருகிறது மேலும் போட்டிபோட்டு கொண்டு ஒவ்வொரு சேனலும் மாறுபட்ட தொடர்களை ஒளிப்பரப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் தொடர்களுக்கு எல்லாம் முன்னோடியாக முதன்மையாக விளங்குவது பிரபல தொலைக்காட்சியான சன் டிவியாக தான் இருக்கும். இந்நிலையில் இந்த சேனலில் ஒளிப்பரப்பாகும் அணைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருவதோடு பெருமளவில் பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் சமீபகாலமாக இந்த சேனலில் பேமசாக ஒளிப்பரப்பாகி வரும் தொடர் என்றால் அது ரோஜா தொடராக தான் இருக்கும். இந்த தொடர் சமீபத்தில் தான் கிட்டத்தட்ட 800- எபிசோடுகளை தாண்டி ஒளிப்பரப்பாகி மக்கள் மனதில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சமீபத்தில் சன் டிவி தனது இணைய பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி கூறி பதிவு போட்டிருந்தார்கள்.
அந்த அளவிற்கு இந்த தொடர் மக்கள் மனதில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். இந்நிலையில் இந்த தொடரில் சிபு சூரியன் என்பவர் நாயகனாகவும் பிரியங்கா நல்காரியும் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இதில் கதையின் நாயகனாக நடிக்கும் சிபு சூரியனுக்கு சமீபத்தில் திடீரென திருமணம் முடிந்துள்ளது என பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் அதிகாரபூர்வ தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை இப்படி இருக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இதுவே எனது கடைசி தொடர் இனிமேல் தொடர்களில் நடிக்கபோவதில்லை என கூறி அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இது கூறித்து அவரிடம் கேட்டபோது நான் கடந்த மூன்றரை வருடங்களுக்கு மேலாக தொடர்களில் நடித்து வரும் நிலையில் தற்போது இணையத்தில் வெளிவரும் படங்கள் மற்றும் வெப் சிரியஸில் நடித்து வருகிறேன். மேலும் நான் சீரியலில் நடிக்கும் போது ஒரு சாதாரணமான ஒரு நடிகர் ஆனால் தற்போது நிறைய அளவிற்கு நடிப்பில் மேம்பட்டு உள்ளேன் என நம்புகிறேன். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரும் இயக்குனருமான ஹம்சலேகா இயக்கும் சகுந்தலா எனும் கன்னட மொழி படத்தில் கிரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இதனை தொடர்ந்து தமிழிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறேன் மேலும் அதில் ஒரு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் என கூறியுள்ளார்.