இந்த கொரோனா நோயானது பொதுமக்களுக்கு மட்டும் அச்சுறுத்தலாக இருக்காமல் திரை பிரபலங்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகிறது கடந்த சில நாட்களாகவே பல திரைப்பிரபலங்களும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், குறிப்பாக இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அமிதாபட்சனில் தொடங்கி நடிகைகள் ஐஸ்வர்யா ராய், ஜெனிலியா மற்றும் தமன்னா வரை பலரது குடும்பங்களும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது, தமிழ் திரையுலகில் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பான செய்தி எஸ்பிபி அவர்கள் கொரோனா சிகிச்சை பற்றிதான்.

எஸ்பிபி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அன்றிலிருந்து இன்றுவரை திரை பிரபலங்களுக்கும் பொது மக்களும் ரசிகர்களும் அவர் உடல் நலம் பெற்று முன்னேறி வர வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர். இப்படி தினமும் மருத்துவமனை நிர்வாகமும் அவரது மகன் எஸ்பி சரணும் எஸ்பிபி உடல்நலம் பற்றிய தகவல்களை அவ்வபோது தனது சமுகவளைதலங்களில் பகிர்கின்றனர். இப்படி கடந்த சில் நாட்களாகவே தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த எஸ்பிபி அவகளது உடல்நலம் சற்று கவலைகிடமாக இருப்பதாக  தகவல்கள் வெளியாகின.

அந்த செய்தியினை பொய்யாகும் வகையில் சரண் வர்கள் தந்தையின் உடல்நலம் சீராக உள்ளதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாமெனவும் தெரிவித்திருந்தார். இப்படி இருக்க மீண்டும் ஒரு செய்தி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு கொரோனா நெகடிவ் ஆகி விட்டது என பரவியது . அந்த தவறான செய்தியையும் சரண் அவர்கள் பொய்யென வீடியோவாக பதிவிட்டிருந்த்கார்.

இப்படி தற்போது எஸ்பிபி அவர்களின் உடல் நிலை 95% முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் சுயநினைவிற்கு திரும்பியுள்ளதாகவும் அவரது மகன் தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தனக்கான பிரார்த்தனை செய்த அனைவருக்கும் தனது கையெழுத்தினை பேப்பரில் எழுதி அதனை புகைப்படமாகவும் வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here