பொதுவாகவே வெள்ளித்திரையில் வெளிவரும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாவது உண்டு அதிலும் நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்கள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெறுவதோடு வசூல் ரீதியாகவும் நல்ல பலனை கொடுக்கும். இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பொதுமுடக்கம் காரணமாக திரையரங்குகள் ஏதும் செயல்படாமல் மூடி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக படங்கள் ஏதும் திரையரங்குகளில் வெளிவராமல் இருந்த நிலையில் இதற்கு மாற்று வழியாக படங்கள் ஓ.டி.டி எனும் இணையதளத்தில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் பிரபல முன்னணி இளம் நடிகர் ஆர்யா நடிப்பில் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதோடு வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் திரைபடம் சார்பட்டா பரம்பரை. அந்த காலத்தில் நடந்த ஆங்கில ரோசமான குத்துசண்டை போட்டியை மையமாக வைத்து எடுக்கபட்ட இந்த படத்தில் ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, ஜான் விஜய், சஹ்பீர், சஞ்சனா, கலையரசன் ஜான் கொக்கன், கலி வெங்கட் என பல முன்னணி சினிமா பிரபல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
மேலும் இந்த படம் மற்ற படங்களை போல் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது அந்த வகையில் இந்த படத்தில் நடித்த அணைத்து கதாபாத்திரமும் மக்கள் மனதில் ஆழ பதியும் படி படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் பல காட்சிகள் மற்றும் வசனங்களை சமூக வலைதளங்களில் பலர் ட்ரோல் மற்றும் அதற்கு தகுந்தாற்போல் நடித்து வருகிறார்கள். மேலும் சொல்லபோனால் இந்த படம் வெளியான நாளில் இருந்து இணையத்தில் இந்த படம் தான் மீம் மற்றும் டெம்ப்லேட் என பலவகையான ஆப்களில் தெரிக்கவிட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் ஆர்யா தனது வாத்தியாரான ரங்கன் வாத்தியாரை சைக்கிளில் வைத்து கூட்டி செல்வார் இந்த காட்சியை நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளார்கள் எனலாம். இப்படி இருக்கையில் அதேபோல் இந்த படத்தில் துரைக்கண்ணு வாத்தியாரின் மாணவராக வரும் டான்சிங் ரோஸ் மற்றும் வேம்புலி இருவரும் தங்கள் வாத்தியாரை சைக்கிளில் அழைத்து சென்று அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
Vaanga Vaathiyaare @GMSundar_ ……naamalum koode ooru sutthi varalaam.
வாங்கோ வாத்தியாரே நாமளும் ஊர சுத்தி வரலாம்!!!@Music_Santhosh @arya_offl @beemji @officialneelam @K9Studioz
Please watch #sarpattaonprime Streaming on @primevideoin pic.twitter.com/Su5YdbQHxG
— Highonkokken (@johnkokken1) August 10, 2021
வாத்தியாரே அங்க பாருங்க அந்த வேம்புலியும் துரைகண்ணு வாத்தியாரும் ஆளே மாறிட்டாங்க.. pic.twitter.com/xnqcST7Y0s
— Shivaa (@ShivaaSRT) August 10, 2021