தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே போதாத காலமாக இருந்து வருகிறது அந்த வகையில் கொரோனா மற்றும் பல இன்னல்கள் காரணமாக பலவிதமான இழப்புகளை சந்தித்து வருகின்றனர். அதிலும் இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்களும் காலமாகியும் உள்ளனர் இப்படி ஒரு நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன்படி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சகீலா. இவர் அந்த மாதிரி படங்களில் நடித்து பிரபலமாகி இருந்தாலும் அதனை முற்றிலும் மாற்றும் விதமாக சின்னத்திரையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி

நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தனது அடையாளத்தையே மாற்றிக்கொண்டதோடு அம்மா எனும் பட்டத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இதனை தொடர்ந்து இவர்க்கு இன்றளவும் திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையில் சகீலா திருநங்கையான மிளா என்பவரை தனது மகளாக தத்தெடுத்து வளர்த்து வருகிறார் . இதனிடையில் இவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு தங்களது பல சுவாரசியாமன தகவல்களை அவரது ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டனர். இவ்வாறு இருக்கையில் அவரது மகளான மிளா திரையுலகில் பணிபுரிந்து வருவதோடு யூடுப் சேனல் ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார் இவ்வாறு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் மிளா சென்ற கார்

எதிர்பாரதவிதமாக விபத்துக்குள்ளானது. இது குறித்து விசாரித்த போது மிளா ஒரு சூட்டிங்கிற்குகாக குமிலி வரை காரில் சென்று கொண்டிருந்தார் அப்போது அவருடன் பாக்கியலட்சுமி சீரியல் திவ்யா கணேஷ், கம்பம் மீனா ஆகியோர் இருந்துள்ளனர்.மூவரும் நல்ல நண்பர்கள் எனும் நிலையில் அடிக்கடி ஒன்றாக வெளியில் செல்வது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வெளியிடுவது வழக்கம்இப்படி இருக்கையில் மூவரும் இணைந்து காரில் குமிலி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது அப்போது திருச்சி பக்கத்தில் சாலையில் செல்லும்போது அவர்களுக்கு பின்னால் கண்டெய்னர் லாரி ஒன்று வந்த நிலையில் அது

நிலைதடுமாறி முன்னால் சென்ற காரின் மீது மோதி அந்த கார் மிளா சென்ற காரின் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது . இருப்பினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை இந்நிலையில் விபத்து குறித்து மிளா கூறுகையில் நல்லவேளை நாங்கள் தப்பித்தோம் ஒரு வேளை எனலுக்கு முன் எதாவது கார் இருந்திருந்தால் எங்களுக்கு நிறைய விபத்து ஏற்பட்டிற்கும். மேலும் எனக்கு மட்டும் சிறிய அளவில் முதுகில் பிளட் கிளாட் மட்டும் ஏற்பட்டுள்ளது என கூறியதோடு விபத்து நடந்த சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here