சின்னத்திரையில் எத்தனையோ பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் அதை காட்டிலும் அதில் வரும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பிரபலமாகத்தான் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மக்களிடையே இன்றளவும் பிரபலமாக இருப்பதோடு தனக்கென தனி ஒரு அடையாளத்தை வைத்துள்ளனர். அதிலும் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளை சொல்லவே தேவையே இல்லை. தங்களது இளமையான தோற்றத்தாலும் வசீகர பேச்சாலும் எளிதில் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து விடுகின்றனர். இப்படி இருக்கையில் அடல்ட் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்றே சொல்ல வேண்டியதில்லை.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனல்கள் பலவற்றில்  இரவு பத்து மணிக்கு மேல்  பெரும்பாலும் அடல்ட்களுக்கு ஏற்ப பல அந்தரங்க கேள்வி பதில் நிகழ்ச்சிகள் தான் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிகளில் ஒரு பிரபல அந்தரங்க டாக்டரும் அவருடன் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பெண் ஒருவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு டாக்டரிடம் விளக்கம் கேட்டு சற்றும் முகம் சுளிக்காமல் அவர்களுக்கு பதில் அளித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் பெண்கள் யாரும் இந்த நிகழ்ச்சிக்கு வர விரும்பாத நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சற்றும் சளைக்காமல் ரசிகர்கள் கேட்கும் எவ்வித கேள்விக்கு கிளுகிளுப்பான பதில்களை கொடுத்து இதன் மூலமாகவே மக்கள் மத்தியில் வெகு பிரபலமானவர் தான் அந்தரங்கம் புகழ் கிரிஜா.

இவர் சமையல் மந்திரம் எனும் நிகழ்ச்சியின் மூலம் அந்தரங்க கேளிவி பதில்களுக்கு விளக்கம் கொடுத்து இளசுகள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். சென்னையை பூர்விகமாக கொண்ட இவருக்கு ஆரம்பத்தில் தோல் சம்பந்தப்பட்ட படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது. இருப்பினும் அந்த ஆசை நிறைவேறாமல் போக தொலைக்காட்சி நேர்காணலில் கலந்து கொண்டு தேர்வாகி தொகுப்பாளினியாக தன் பயணத்தை தொடங்க ஆரம்பித்துள்ளார்.

தொடர்ந்து அந்தரங்க நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் மற்றும் சினிமா வட்டரத்தில் பிரபலமான இவருக்கு பல சினிமா வாய்ப்புகள் வந்த நிலையிலும் இவர் நடிக்க ஒப்பு கொள்ளவில்லையாம். அதற்கு காரணம் அந்த பட வாய்ப்புகள் பெரும்பாலும் கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்த காரணத்தால் அதை மறுத்துவிட்டாராம். இவ்வாறு ரசிகர்களின் மனதில் பிரபலமாக இருக்கும் இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்த தகவல் மற்றும் இணையத்தில் வெளியாகி படு வைராளாகி வருகிறது. அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருவதோடு பலவேறு விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here