மற்ற மொழிகளை விட தமிழில் திரைப்படங்களை விட சீரியல் மற்றும் டிவி நிகழ்சிகள் எளிதில் மக்களை சென்றடைகின்றன. சினிமாவில் நுழையவும் திரைப்படங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசையிலும் சின்னத்திரையில் தனது திறமையை கட்டும் பல இளம் நடிகர் நடிகைகளும் மக்களுக்கு எளிதில் பிடிதுபோகின்றன்ர். இப்படி இருக்க கடந்த பல வருடங்களாகவே தமிழ் சீரியல்கள் நம் வாழ்வின் ஒன்றாக மாறிவிட்டது . வீட்டில் பெண்கள் சீரியல் பார்க்கும் காலம் போய் தற்போது ஆண்களும் இளைஞர்களும் சீரியல் பார்க்க தொடங்கி விட்டனர்.
இப்படி இருக்க கடந்த வருடத்தில் சக்கைபோடு போட்ட சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல். இந்த சீரியலில் நடித்த அனைவறுமே இன்று உச்ச நட்சத்திரங்கள், சின்னத்திரையில் கடந்த சில வருடங்களாகவே ஒரே மாதிரியான சீரியல்கள் வந்திருந்தாலும் அதிலிருந்து சிறிது மாறுபட்டு இந்த சீரியல் மக்களின் மனதில் எளிதில் இடம் பிடித்து விட்டது.
பல எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலுக்கு வெற்றிவிழாவும் கூட அந்த தொலைக்காட்சியால் நடத்தப்பட்டது, இன்றுவரை மக்களும் ரசிகரக்களும் இந்த சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர். பல திருப்பங்களுடன் கோரோனாவிர்க்கு பிறகு இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் இந்த சீரியலில் ஒளிப்பதிவாளர் இறந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த செய்தியை அறிந்த செம்பருத்தி சீரியலில் வில்லியாக நடிக்கும் பாரதா நாயுடு சோகத்தில் ஆழ்ந்தது மட்டுமல்லாமல் அதனை வீடியோவாகவும் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அந்த வீடியோவில் செம்பருத்தி சீரியலை பற்றி பல விவரங்களை ரசிகர்களுக்கு தெரிவித்தார், இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.