சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் வெகு பிரபலம் இந்த நிலையில் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய டிஆர்பிக்காக போட்டி போட்டு கொண்டு பல புதுவிதமான சீரியல்கள்களை தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒளிப்பரப்பி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது எனலாம். அந்த அளவிற்கு மத்த சீரியல்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்த சீரியல் இன்றளவும் முன்னணி சீரியலாக ஓடி கொண்டுள்ளது.

 

இந்த வகையில் இந்த தொடரில் ஆதித்யா கதாபாத்திரத்தில் ஆபீஸ் தொடர் புகழ் கார்த்தியும் பார்வதி கதாபாத்திரத்தில் சபானாவும் நடித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் காதல் மற்றும் ரோமன்ஸ் காட்சிகளுக்காகவே பலர் இந்த தொடருக்கு ரசிகர்களாக உள்ளார்கள். இப்படி இருக்கையில் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்புடன் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரிலிருந்து கார்த்தி விலகி விட்டார் இந்நிலையில் இந்த சீரியல் மக்கள் மத்தியில் அவ்வளவு தான் என எண்ணி வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக யூடுப் தொகுப்பாளர் அக்னி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இருப்பினும் கார்த்தி இருந்த வரவேற்பு அந்த தொடருக்கு சற்று குறைந்துள்ளது என்பதே மக்களின் கருத்து. இப்படி இருக்கையில் கார்த்தி அந்த தொடரில் இருந்து விலகி முகிலன் எனும் வெப் சீரிஸில் கதாநாயகனாக நடித்து வந்தார். மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா பாண்டியன் நடித்து வந்தார் இந்த தொடர் பெருமளவு வெற்றி பெரும் எண்ணிய நிலையில் அது எதிர்பார்த்த அளவிற்கு பிரபலமாகவில்லை. இந்நிலையில் இதனால் மனமுடைந்த கார்த்தி பல நாட்கள் கழித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் என்னை எந்த படத்திலும் வேலை செய்ய விடாமல் கெடுக்கிறார்கள். இதன் காரணமாக நானே சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து படம் நடிக்க இருக்கிறேன். அதனால் அதற்கு உங்களால் முடிந்த நிதி உதவிகளை அனுப்புங்கள் எனவும் வங்கி விவரங்களையும் கூறி இருக்கிறார். இருப்பினும் கார்த்தி மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் மேலும் அவருடைய அப்பா ஒரு பிரபல தயாரிப்பாளரும் ஆவர். இப்படி இருக்கையில் இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here