சின்னத்திரையில் தற்போது பல்வேறு தொடர்கள் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சேனலுக்கு சேனல் போட்டி போட்டு கொண்டு தொடர்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில்  ஒளிப்பரப்பாகும் அணைத்து தொடர்களும் மக்களிடையே பெருமளவில் பாரக்கபடுவதோடு பலத்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது பல தொடர்கள் திரைப்படங்களின் தலைப்புகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில் இந்த தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளை காட்டிலும்  மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளார்கள்.

மேலும் அவர்களது நடிப்பு மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் மக்களிடையே திரைப்படத்தில் காட்டிலும் இதில் பெருமளவு ரசிக்கும்படியாக உள்ளது. இவ்வாறான நிலையில் இதில் வரும் பல நடிகர் நடிகைகள் தொடருக்காக மட்டும் ஜோடியாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக மாறியுள்ளனர். அந்த வகையில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த ஜோடியான செந்தில் மற்றும் ஸ்ரீஜா அவர்கள் தொடரில் மட்டுமின்றி இந்த தொடரில் நடித்ததன் மூலம் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்களை தொடர்ந்து பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ்,ஆல்யா மான்சா இருவரும்காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு இன்றளவும் பல தொடர்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் வரிசையில் இன்னொரு தொடர் ஜோடியும் திருமணம் செய்து கொள்ளபோகிறார்கள் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் வரும் தொடர் செம்பருத்தி. இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. மேலும் இந்த தொடரில் பார்வதியாக நடிக்கும் ஷபானாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். இந்நிலையில் இவருக்கு ஜோடியாக ஆபீஸ் கார்த்திக் நடித்து வந்தார். இவ்வாறான நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இப்படி இருக்கையில் கார்த்திக் இந்த தொடரில் விலகி தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு வேறு ஒரு நடிகர் நடித்து வருகிறார்.அப்ப கார்த்திக் காதலர் இல்லையா என அவரது ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில் ஷபானா தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டு இதற்கு பதிலளித்துள்ளார்.

அதில்,விஜய்டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் நடிப்பவர் ஆர்யன் இவரது இணைய பக்கத்தில் பாரிஸில் இருந்து பெண் ஒருவர் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என கேட்டுள்ளார். அதற்கு உடனே ஆர்யன் அந்த பதிவை அப்படியே ஷபனாவிற்கு அனுப்பி இவருக்கு என்ன பதில் சொல்லட்டும் என கேட்டுள்ளார். அதற்கு ஷபானா அந்த பதிவின் கீழ் என்னுடையது என பதில் அளித்துள்ளார். இதன் மூலம் ஆர்யன் என்னுடையவர் என ஷபானா கூறியுள்ளார். இந்நிலையில் இருவரும் காதலித்து வருவது உறுதியாகியுள்ளது. இருப்பினும் இவர்கள் இருவருக்கும் இடையே எவ்வாறு காதல் மலர்ந்தது என்று புரியாமல் அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here