எந்த ஒரு உதவியும் சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தவர் நடிகர் அஜித். இவரின் ரசிகர்கள் இவரை செல்லமாக தல என்று அழைப்பார்கள். ஆரம்பகாலத்தில் சினிமாதுறையில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு ஹீரோவாக  தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை நடித்து முத்திரை பதித்தவர் நடிகர் அஜித் குமார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு நடிகையாக வளர்ந்து நடிகர் அஜித் யுடன் சேர்ந்து அமர்க்களம் என்ற படத்தில் நடித்தார் நடிகை பேபி ஷாலினி.

இந்த படத்தின் பொது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளார்கள். இவர் நடிப்பில் தற்போது வலிமை உருவாகி வருகிறது. இந்த படத்தை முன்னணி இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார்.  நடிகை ஷாலினிக்கு ஷாமிலி என்ற தங்கையும் ரிச்சர்ட் என்ற அண்ணணும் உள்ளார்கள்.

ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட்சமீபத்தில் வெளியான  திரெளபதி படத்தில்  ஹீரோவாக நடித்து பிரபலமானார். மற்றும் அவரின் தங்கை ஷாமிலி அஞ்சலி என்ற படத்தின் முலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அந்த படத்தில் அவர் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அந்த படத்திற்காக தேசிய விருதை வென்றரர்.

இந்நிலையில் தனது அக்காவின் கணவர் நடிகர் அஜித்யுடன் இணைந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைபடத்தில் ஷாமிலி நடித்துள்ளார். ஆம் நடிகை தபு மற்றும் ஐஸ்வர்யா ராய்  தங்கை கதாபாத்திரத்தில் தான் இப்படத்தில் ஷாமிலி நடித்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் நடிகை ஷாலினியின் தங்கையா இது என்று வியப்பில் உள்ளனர். மேலும் இந்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது….

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here