தமிழ் சினிமாவில் பின்னனி பாடகிகளில்ஒருவராக வளம் வந்தவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி ஆவார். இவர் தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் பால பாடல்களை பாடியுள்ளார். இருப்பினும் இவர் இதன் மூலம் பிரபலமானதை காட்டிலும் இவர் பாலியல் சர்ச்சைகளை வெளியிட்டதன் மூலமாகவே மக்கள் மத்தியில் வெகு பிரபலமானார் எனலாம். இந்நிலையில் இவர் ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் சூப்பர் சிங்கர் ஷோவை தொகுத்து வழங்கினார் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து சென்னையில் ஒளிப்பரப்பாகும்  ஆஹா பண்பலையில் திங்கள் முதல் சனி வரை ‘ஆஹா காப்பி கிளப் போன்ற பல வானொலி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார்.

மேலும் இவர் பல திரைப்படங்களில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவ்வாறான நிலையில் வாரணம் ஆயிரம் ,உன்னாலே உன்னாலே, சத்தம் போடாதே, சில்லுனு ஒரு காதல் போன்ற பல படங்களில் நடித்த பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவ்வாறான நிலையில் பிரபல இசையமைப்பாளரான ஏ .ஆர்.ரஹ்மான் இசையில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்ரன் மற்றும் கீர்த்தனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால் இந்த படத்தில் தனது முதல் பாடலை பாடியதன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர் சின்மயி.

மேலும் இந்த படத்தில் இவரது பாடல் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து பல படங்களில் பாடியுள்ளார். மேலும் இவர் பெரும்பாலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலேயே பெரும்பாலான பாடல்களை பாடியுள்ளார். இவ்வாறான கடந்த 2014-ம் ஆண்டு பிரபல நடிகரான ராகுல் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்ககூடியவர் சின்மயி. அவ்வபோது மாடர்ன் புகைப்படங்களையும் சர்ச்சைக்குரிய பல கருத்துகளையும் வெளியிடுவதன் மூலம் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளார் எனலாம். இவ்வாறான நிலையில் கஜேந்திரகுமார் என்பவர் தனக்கு பணம் தரவேண்டும் எனவும் அதை அவர் தர மறுக்கிறார் எனவும் அவர் மீது காவல் துறையில் வழக்கு தொடுத்துள்ளார்.

மேலும் அந்த வழக்கை தொடர்ந்து பிரபல கவிஞர் வைரமுத்து அவர்களின் மீது பாலியல் வழக்கு ஒன்றையும் கொடுத்துள்ளார். அதில் திரைப்பட விழா ஒன்றில் கவிஞர் வைரமுத்து அவர்கள் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அந்த வழக்கில் கூறியிருந்தார். இதன் விளைவாக கோபமடைந்த திரையுலகினர் அவரை பின்னணி பாடகி யூனியனில் இருந்து விலக்கினர். இதை தொடர்ந்து பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் இருந்தும் நீக்கியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இந்த சர்ச்சை முடிவடைவதற்குள் மேற்கொண்டு ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் சின்மயி. இவரது இணைய பக்கத்திற்கு அவரது ரசிகர் ஒருவர்  கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதில் அந்த நபர் சின்மயிடம் அவரது  புகைப்படத்தை அனுப்பும் படி கேட்டுள்ளார். இதற்கு சற்றும் கோபப்படாமல் அவரிடம் நீங்கள் இன்பம் செய்து கொள்ளுங்கள், இன்பம் செய்வது ஒன்றும் தவறில்லை என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியதோடு வைராளாகி வருகிறது.