திரையுலகம் மட்டுமின்றி அனைவருமே இசையை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு இசை என்பது அனைத்து விதமான மக்களுக்கும் பிடித்தமான ஒன்று எனலாம். தினந்தோறும் இசையானது பாடல்களின் மூலம் மக்கள் மனதை ஒரு வகையான புத்துனர்ச்சியை ஏற்படுத்துகிறது எனலாம். இவ்வாறு மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்பம் துன்பம் என அனைத்திலும் பக்க பலமாக இருக்கும் இந்த இசையின் ஒரு சகாப்தம் என்றால் அது மறைந்த எஸ்.பி. பி பாலசுப்ரமணியன் அவர்கள் தான். இவரது பாடலை கேட்காதவர்களோ பிடிக்காதவர்களோ இல்லை எனலாம் அந்த அளவில் இவரது குரல் பாமர மனிதன் பல பிரபலங்கள் வரை பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

இவர் இதுவரை நாற்பதாயிரத்துக்கு மேலான பாடல்களை பாடியுள்ளார். மேலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி. கன்னடம் என பல மொழிகளில் பல பாடல்களை பாடியதோடு பல தேசிய விருதுகளையும் பிற இதர விருதுகளையும் வாங்கிய பெருமைக்குரியவர். மேலும் இவர் பாடகர் என்பதை பல படங்களில் நடிகராகவும் பல முன்னணி நடிகர்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். இந்நிலையில் இவரது வயதையும் இவர் பாடியுள்ள பாடல்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பார்த்தால் இவர் பிறந்ததலிருந்து நாள் ஒன்றுக்கு இரண்டு பாடல் விதம் பாடியுள்ளாராம்.

இவ்வாறு தனது வாழ்நாள் முழுவதையும் இசைக்காகவே அர்பணித்தவர் தான் எஸ்.பி.பி. இவ்வாறு பல மக்களின் மனதில் தனது பாடல்களின் மூலம் பிரபலமாக இருந்தவர் கடந்த வருடம் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறுதியில் சிகிச்சை பலனின்றி காலமானர்.

இவரது மறைவு ஒட்டு மொத்த திரையுலகத்தையும் மற்றும் மக்கள் அனைவரையும் நீங்காத துயரத்தில் ஆழ்த்தியது. அவர் என்னதான் இந்த மண்ணுலகை விட்டு மறைந்த பின்னும் அவரது பாடல்கள் மூலம் தினந்தோறும் பல மக்களின் மனதில் அவர் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார். இப்படி இருக்கையில் இவரது 15-வது வயதில் இவர் எடுத்துக்கொண்ட இளம்வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அதை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here