இந்த கோரோநாவல் பல பொதுமக்களும் அவதிப்பட்டு வரும் நிலையில் பிரபலங்கள் மட்டும் என்ன விதிவிளக்கா? பல பிரபலங்களும் இந்த கோரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். பாலிவுட்ட்டில் தொடங்கில் தமிழ் சினிமா வர பல பிரபலங்களும் கோரோனாவுக்கு அவதிப்பட்டு வருகின்றனர். அமிதாபச்சனின் குடும்பமே கோரோநோவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக வந்த செய்தியை கடந்து செல்வதற்குள் தமிழ் சினிமாவில் பாடகர் எஸ் பி பிக்கு கொரோனா என்ற செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்துடன் இருந்ததாக செய்திகள் வெளிவந்தன. அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் தனது கைகளை உயர்த்தி காண்பித்து தனது உடல்நலம் சீராக இருப்பதாக பதிவிட்டிருந்தார். இப்படி இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ் பி பி அவர்களின் உடல் நிலை சற்று மோசமாக இருப்பதாகவும் அதனால் வேண்டுலேட்டார் உதவியுடன் அவருக்கு சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
ஐம்பது சதவீதம் மட்டுமே ஆக்சிஜன் தேவை படுவதால் அவரது உடல் நிலை முன்னேறி வருவதாக அவரது மகன் எஸ் பி சரண் வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதனால் பல பிரபலங்களும் குறிப்பாக சூப்பர்ஸ்டார் ரஜினி தொடங்கி இளையராஜா வரை அவருக்கா பிராதிப்பதாக அவர் மீண்டு வரவேண்டும் என்று வீடியோவாக பதிவிட்டு அவர்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் எஸ் பி பி அவர்களுக்காக கூட்டு பிராத்தனை செய்ய திரையுலகை சேர்ந்த அனைவரும் முயற்சி செய்து வந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை மீண்டும் மோசமாக இருப்பதாக அவரது மகன் எஸ் பி சரண் வீடியோவாக வெளியிட்டுள்ளார. இதனை கண்ட ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தது மட்டுமல்லாமல் கடவுள் கைவிடமாட்டார் என கமென்ட் செய்து வருகின்றனர்.
Today’s Update!!
Don’t worry sir, we are with you @charanproducer. Let us keep praying and keep the hopes high! For #SPB sir’s speedy recovery!! #SPBalasubrahmanyam #SPBalasubramanyam #GetWellSoonSPBSIR #GetWellSoonSPB #PrayforSPB #SPBCharan #SPcharan pic.twitter.com/sFQ0WUYdUr
— PRO Kumaresan (@urkumaresanpro) August 20, 2020