வெள்ளித்திரையில் வெளிவரும் திரைப்படங்களை ஓரம்கட்டும் அளவிற்கு சின்னத்திரையில் வெளிவரும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இந்த தொடர்கள் மக்கள் மத்தியில்  தினந்தோறும் பெரிதளவில் பார்க்கபடுவதோடு அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எளிதில் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்று விடுகின்றனர். இப்படி இருக்கையில் இந்த சின்னத்திரையில் வெளிவரும் தொடர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்து வருவது பிரபல தொலைக்காட்சியான சன் டிவிதான்.

இந்த வகையில் பல இல்லத்தரசிகளின் பிரபலமான சேனல் என்றால் அது இதுவாக தான் இருக்கும். அந்த வகையில் இந்த சேனலில் வெற்றிக்கரமாக ஒளிபரப்பாகி நிறைவடைந்த தொடர் அழகு. இந்த தொடர் மக்கள் மத்தியில் பெருமளவில் ரசித்து பார்க்கப்பட்டதோடு வெகுவாக பிரபலமானது. மேலும் இந்த தொடரில் பிரபல முன்னணி நடிகை ரேவதி, தலைவாசல் விஜய்,ஸ்ருதி ராஜ், ஐஸ்வர்யா போன்ற பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து இருந்தனர். இந்நிலையில் இந்த சீரியலில் நடிகை ரேவதியின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றவர நடிகை சஹானா.

இவர் என்னதான் இந்த சீரியலில் சிறப்பாக நடித்தாலும் சில காரணங்களால் பாதியிலேயே இந்த தொடரை விட்டு விலகி விட்டார். இது கூறித்து அவரிடம் கேட்டபோது இந்த தொடரில் ஆரம்பத்தில் இயக்குனர்கள் என்னிடம் ரேவதி அவர்களுக்கு லீடு கொடுக்கும் கதையில் நடிக்கபோவதாக தான் சொன்னார்கள். மேலும் உங்கள் கேரக்டருக்கு தான் ரொம்ப முக்கியத்துவம் இருக்குன்னு சொன்னங்கா ஆனால் அதற்கு எதிர்மாறாக எனது கேரக்டர் ரொம்ப முக்கியத்துவம் இல்லாமல் போகப்போக சலிப்படிக்க ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக தான் அந்த தொடரில் இருந்து நான் விலகி விட்டேன் என கூறினார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி சமீபத்தில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதோடு அவருடைய பெயர் அபிஷேக் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் அவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு அவரது ரசிகர்கள் மத்தியில் பல விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் என்னதான் காதலரா இருந்தாலும் இப்படியா இருப்பீங்க என பல கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here