தற்போது பொறுத்தவரை வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளது இதன் காரணமாக பல முன்னணி நடிகர் நடிகைகளும் சின்னத்திரை பக்கம் நகர்ந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் தொடர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. சொல்லப்போனால் பல இல்லத்தரசிகளின் மற்றும் இளைஞர்களின் ஒரே சாய்ஸ் சேனல் விஜய் டிவியாக தான் இருக்கும். இந்த வகையில் இந்த சேனலில் பலவகையான வித்தியாசமான ரியாலிட்டி ஒளிபரப்பாகி மக்களை சந்தோசபடுத்தி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து இந்த சேனலில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருவதோடு பல மக்களின் மனதை கொள்ளை கொண்ட இசை போட்டி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாவதை காட்டிலும் சினிமா வட்டாரத்திலும் பிரபலமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல வெற்றி பாடல்களை தொடர்ந்து பாடி வருகிறார்கள். இவ்வாறு இருக்கையில் இவர்களை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக கலந்து கொள்ளும் முன்னணி பாடகர்களும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் 8 -வது சீசன் மக்கள் மத்தியில் வேற லெவலில் பேமஷகா பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பிரபல பாடகர்களான எஸ்.பி.பி.சரண், அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், பென்னி தயாள் போன்றோர் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவரான பென்னி தயாள் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் இனிமேல் நான் கலந்து கொள்ள மாட்டேன் இதுவே எனக்கு போதும் என விரக்தியுடன் கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இது கூறித்து அவர் கூறியதாவது இனிமேல் சூப்பர் சிங்கர் சம்பந்தமாக எந்த பதிவையும் நான் பதிவிட மாட்டேன் என்னை திட்டி தீர்த்து வரும் மெசேஜ்களை என்னால் ஏற்றுகொள்ள முடியாது என் மீது நீங்கள் காட்டிய அன்பிற்கு நன்றி இதுவே போதும் நானும் சாதாரண மனிதன் தான் என்னால் முடியவில்லை மேலும் அடுத்த சீசனிலும் உங்களை சந்திக்க மாட்டேன் எனவும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.
View this post on Instagram