தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்களை தாண்டி அவர்களுடன் நடிக்கும் துணை நடிகர் கதாபத்திரம் மற்றும் குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தைகள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்தவகையில் குறிப்பாக குழந்தை நட்சத்திரங்கள் தங்களின் கதாபாத்திரங்களின் சிறப்பாக நடித்ததின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர். அந்த காலத்தில் நடிகை ஸ்ரீதேவி , குட்டி பத்மினி , பேபி ஷாலினி போன்ற நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்தனர்.  அந்த வகையில் அவர்களை தொடர்ந்து தற்போது சினிமா பிரபலங்களின் குழந்தைகள் தமிழ் சினிமாவை கலக்கி வருகின்றனர் என்று சொல்லலாம்.

அந்த வகையில் விஜயின் தெரி படத்தில் நடித்த நைனிகா, தெய்வ திருமகள் படத்தில் நடித்த பேபி சாரா, விஸ்வாசம் படத்தில் நடித்த பேபி அனிகா போன்ற குழந்தை நட்சத்திரங்கள் தங்களின் நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சூரியவம்சம் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை பேபி ஹேமலதா , இந்த படத்தில் பாயசம் என்ற வசனம் இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் என்று சொல்லலாம். இவர் இந்த படத்திற்கு முன்னாடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் நடித்து இருந்தார்.

அதன் இதை தொடர்ந்து பூவே உனக்காக, சேது போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரர்வேற்பை பெற்றார். காதல் கொண்டேன் ,மதுர ,திமிரு போன்ற படங்கைளில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பின்னர் சீரியலில் களம் இறங்கிய இவர் சித்தி, தென்றல் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் போன்ற தொடர்களில் நடித்து பெண் ரசிகர்கள் மத்தில் நீங்காத இடம் பிடித்தார்.

கடைசியாக முந்தானை முடிச்சு  சீரியலில் நடித்த பிறகு சினிமா மற்றும் சீரியலில் விலகி இருந்த பேபி ஹேமலதா தற்போது எப்படி யுள்ளார் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்த இருந்த நிலையில், தற்போது அவர் சமூக வலைதளங்களில் திருமணம் புகைப்படம் ஒன்றை வெளியுட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பேபி ஹேமலதா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்…

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here