பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பனியாற்றி வரும் கமல்ஹாசன் அவர்கள்.நேற்று நடந்த நிகழ்ச்சியில் சமிபத்தில் நடந்த கட்டவுட் விழுந்ததில் சாலை விபத்தில் பலியான சுபஸ்ரீ குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து தனது ரசிகர்களிடம் தனது படங்களுக்கு தயவு செய்து இனிமே விளம்பர பதாகைகளை வைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார் .இதை அடுத்து காமெடி நடிகர் விவேக் சமுக சேவைகளை செய்து வருகிறார்.
அவர் இச்சம்பவம் குறித்து பேசுகையில் ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார் இனிமேல் திரையிடப்படும் பெரிய நட்சத்திரங்களின் படத்திருக்கு விளம்பர கட்-அவுட் வைக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது நடிகர் சூர்யா அவர்கள் எந்த படத்திற்கும் என் ரசிகர்களாகிய நீங்கள் விளம்பர கட்-அவுட் வைக்க வேண்டாம் எனவும் அப்பணத்தை ஏழை பள்ளி மாணவர்களுக்கு உதவ பயன்படுத்துமாறு கேட்டுகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதே போல் நடிகர் விஜய் தனது நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் பட இசை வெளியிட்டு விழாவிற்கு எந்த ஒரு பேனர் வைக்க கூடாது என நிர்வாக மன்ற தலைவர்களை வலியுறுத்தியுள்ளார்.மற்றும் தல அஜித் ரசிகர்கள் இனிமேல் எந்த ஒரு படத்துக்கும் கட்-அவுட் வைக்க மாட்டோம் என உறுதிமொழி மேற்கொண்டனர்.