தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் மட்டுமல்லாமல் சினிமாவை சார்ந்து பல துறைகளில் பணியாற்றுகிறார்கள்.அதில் ஒரு படம் திரைக்கு வெளியாக வேண்டும் என்றல் அதில் வேலை செய்யும் உதவியாளர்கள் ஏராளம்.இதில் இயக்குனர், உதவி இயக்குனர், கேமராமேன் போன்ற பல பிரிவுகள் உண்டு .அந்த வகையில் ஒரு நடிகைக்கு திரைக்கு அழகாக வருவதற்கு அதற்கு பின்னல் வேலை செய்யும் பணியாட்கள் சொல்லவே தேவையில்லை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, சமந்தா, தமன்னா, கீர்த்தி சுரேஷ் அவர்களின் உதவியாளர் நடிகைகளின் உதவியாளர் குறைந்த பட்சம் அதற்காக எழு அல்லது எட்டு பேராவது பணிபுரிபவர்கள்.
இதில் பணிபுரியும் அனைவர்க்கும் தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுக்க வேண்டும்.நடிகர், மற்றும் நடிகைகளின் சம்பளம் மட்டுமல்லமல் வேலை செய்யும் அணைத்து சினிமா துறையில் உள்ள பிரிவுகளுக்கு கொடுக்க வேண்டும்.நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளம் எப்படியும் கோடியை தொட்டுவிடும்.அதே போல் அவர்கள் உதவியாளர் சம்பளத்தை பற்றி பிரபல தயாரிப்பாளர் ஆனா கே ராஜன் ஒரு விழா மேடையில் ஒரு தயாரிப்பாளர் எவ்ளோ சிரமங்களை சந்திக்கின்றார் என்று எவருக்கும் தெரியது.
இவர்களுக்கு ஒரு நாளைக்கு உதவியாளராக பணிபுரிபவர்களுக்கு கிட்டத்தட்ட 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சம்பளம் குடுக்க வேண்டியதாக இருக்கிறது .இதில் படம் ஓடினால் தான் எங்களுக்கு லாபம் இல்லையேல் நாங்கள் எங்கு செல்வது என்பது பற்றி தங்கள் கருத்தை கூறியுள்ளார்.சினிமா துறையில் இருக்கும் ஒவ்ஒரு துறையினருக்கும் சங்கங்கள் உள்ளனர் அதில் தயாரிப்பு நிறுவன சங்கத்தின் சார்பாக கோரிக்கைகளை வைத்துள்ளோம்.அதில் நாங்கள் நடிகர்,நடிகைகளுக்கு குடுக்கும் சம்பளம் அதிகம்.
அதில் அவர்கள் கூட பணியாற்றும் அனைவருக்கும் எங்களால் சம்பளம் கொடுக்க இயலாது .தற்போது அவர் நடிகர் மற்றும் நடிகைகள் அவர்களின் உதவியாளராக வேலை செய்பவர்களுக்கு அவர்களே சம்பளம் கொடுக்கவேண்டும்.அதே போல் கேரவேன் போன்ற விஷயங்களுக்கு நடிகர்களே கொடுக்க .இது குறித்து தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பேசுவேன் என்று தயாரிப்பாளர்களின் சார்பாக கூறியுள்ளார்.இது எங்களுக்கு ஒரு பெரிய சுமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.