தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தில் இயக்குனராக வேண்டும் என்றால் அவ்வளவு எளிது அல்ல. பல வருடங்களாக  இயக்குநாராக வேண்டும் என்று இன்றளவும் பலர் போராடி வரும் நிலையில் தன் இயக்கிய முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதை பெற்றவர் எஸ்.பி.ஜனநாதன்.2003-ம் ஆண்டு சாம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளியான இயற்கை திரைப்படம் தான் இவரது முதல் படைப்பு.அதன் பின்பு சமூகத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக பல புரட்சிகரமான படங்களில் தன் கவனத்தை செலுத்தினார் ஜனநாதன். ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை போன்ற வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் இவர் மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த வரவேற்பையும் புகழையும் வென்றார்.

இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை திரைபடம் ரசிகர்கள் மற்றும் உலகளவில் சிறந்த படமாக பெரிதளவில் பேசப்பட்டது.இவ்வாறான நிலையில் ஜெயம் ரவி நடித்த பூலோகம் திரைபடத்தில் வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.  இத்தனை தொடர்ந்து தற்சமயம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் லாபம் எனும் திரைபடத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு பரபரப்பாக நடந்து  வரும் நிலையில் எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை குறைவு காரணமாக அபோல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் காலமாகிவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தது.

இந்த செய்தி வெளியான சிலமணி நேரங்களிலேயே இயக்குனர் அமீர், கருபழனியப்பன் என்றும் பலரும் ஜனநாதனின் உடல்நிலை கூறித்து சமூக வலைதளங்களில் அவர் நன்றாக இருக்கிறார் என தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்கள். இவ்வாறான நிலையில் எஸ்.பி.ஜனநாதன் கூறித்து அவர் உதவியாளர்களிடம் கேட்ட போது, கடந்த 11-தேதி மதியம் வழக்கம் போல் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு சென்றார். ஆனால் மணி 3.30 மேல் ஆகியும் அவர் திரும்பததால் நங்கள் வீட்டிற்க்கு சென்று பார்த்தபோது கதவு திறந்திருக்க சுயநினைவின்றி ஜனநாதன் மயங்கி கிடந்தார்.

மேற்கொண்டு அவரை மீட்டு கிரீம்ஸ் ரோட்டிலுள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தோம்.அங்கு அவருக்கு தீவீர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்த எஸ்.பி.ஜனநாதனின் மறைவு திரையுலகில் உள்ளவர்களை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் விஜய் சேதுபதி, ஜெயம்ரவி போன்ற பல முன்னணி திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here