தமிழ் சினிமாவில் பொருத்தவரை தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் அதிலும் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட பல நடிகைகள் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருவதோடு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்கள். அந்த வகையில் மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற காதலை மையமாக வைத்து வெளியான படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபலமாகி இதன் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை.
இவர் தமிழில் வந்த துவக்கத்திலேயே நடிப்புக்கு பெயர் போன நடிகர் படத்திலும் அதனை தொடர்ந்து ஒல்லியான தோற்றத்தை கொண்ட பிரபல முன்னணி நடிகர் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கதாநாயகியாக நடித்தார். இப்படி இருக்கையில் இதன் பின்னர் இவர் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவார் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையிலும் அவ்வபோது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் இதனை தொடர்ந்து மலையாள படங்களில் பாடகியாகவும் பல பாடல்களை பாடி அசத்தி வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க அந்த இளம் நடிகை தற்போது பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வருவதோடு அவரே தஞ்சம் என இருந்து வருகிறார். இதைத்தாண்டி அம்மிணி எது செய்வது என்றாலும் அவரை கேட்காமல் செய்வதில்லையாம் இதன் காரணமாக அம்மினிக்கு வந்த பல படவாய்ப்புகளை கூட மறுத்து விட்டு இருந்தாலும் அவர் நான் இருக்கிறேன் நான் பார்த்து கொள்கிறேன் என்ற ஒற்றை வார்த்தையில் அபப்டியே கரைந்துபோய் அவர்தான் உலகம் என இருந்து வருகிறாராம் அம்மிணி. இப்படி இருக்கையில் இந்த தகவல்களை எல்லாம் கேட்டறிந்த அம்மிணியின் குடும்பத்தினர் அவருக்கு இவருக்கு எப்படியாவது திருமணம் முடித்து விடவேண்டும் என மாப்பிள்ளை பார்க்க துவங்கி உள்ளனர்.
இது குறித்து அம்மினியிடம் கேட்டபோது அதற்கு அவர் எனக்கு தற்போதைக்கு திருமணம் எல்லாம் வேண்டாம் நான் சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை கேட்ட குடும்பத்தினர் உடனே ஏளனமாக இதையேதான் ரொம்ப நாளாக சொல்லிட்டு இருக்க என கலாயித்து வருகிறார்களாம் . இப்படி ஒரு நிலையில் அந்த இளம் நடிகை அவருடன் காட்டும் நெருக்கத்தை பார்த்தால் எப்போது வேண்டும் என்றாலும் ஓட்டம் பிடித்து விடுவார் போல தெரிகிறது என பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகில் மத்தியில் வைரளாகி வருகிறது.