பொதுவாகவே திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் எத்தனை வயது ஆன நிலையிலும் இன்றும் மாஸ் ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார்கள். சொல்லபோனால் தாத்தா வயதை கடந்து நிலையிலும் இன்றைக்கும் வெள்ளித்திரையில் திரைப்படங்களில் பல இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்கள் மேலும் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் மேக்கப் போட்டு அப்படியே இளம் வயது நடிகர்களாக மாறி மாஸ் காட்டி வருவதோடு இளம் வயது நடிகைகள் தான் ஜோடியாக வேண்டும் என மல்லுக்கட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் 60-வயது மூத்த நடிகரான ஒருவர் தற்போது புதிதாக ஒரு புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் இவரின் எந்த படமும் இதுவரை சரிவர ஒடவில்லை இருப்பினும் தொடர்ந்து தனது சொந்த காசை செலவு செய்து படங்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார். மேலும் இவரெல்லாம் எப்படி ஹீரோவாக ஆனார் என பலர் எண்ணி வந்த நிலையில் குறைந்தது வருடத்திற்கு இரண்டு படமாவது ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இவர் நடித்த பழைய படங்களில் இவர் நடித்த காட்சி மற்றும் நடனத்தை கேலி செய்து வேற லெவலில் கலாயித்து வருகிறார்கள் இளைஞர்கள். இந்நிலையில் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்த ஐந்து எழுத்து பெயர் கொண்ட  நடிகையுடன் ஏற்கனவே ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கையில் தற்போது எடுத்து வரும் படத்திலும் அந்த நடிகையை ஒப்பந்தம் செய்யகோரி அடம்பிடித்து வருகிறாராம்.

இதன் காரணமாக படபிடிப்புக்கு சரிவர வரமால் இழுத்தடித்து வருகிறாராம் இது கூறித்து கேட்டபோது எப்படியாவது அந்த நடிகையை ஜோடியாக நடிக்கக் வையுங்கள் என தயாரிப்பளர்களிடம் மிரட்டல் விடும் அளவிற்கு அடம்பிடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here