தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை வில்லன் நடிகர்களுக்கு பஞ்சம் தான். இப்படி யாரவது ஒருவர் தமிழில் விள்ளனாக அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடித்தால் பின்னர் குனசித்தர கதாபத்திர வேடங்களில் அவர்கள் நடித்து தனது போக்கையே மாற்றிக்கொள்வார்கள். இப்படி வில்லன் நடிகர்களை வட இந்திய மொழிகளிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும் இருந்து வில்லன் நடிகர்களை அறிமுகபடுத்தி தமிழ் இயக்குனர்கள் நடிக்க வைத்தனர். இப்படி இன்றுவரை தெலுங்கில் இருந்து தமிழ் வந்த வில்லன் நடிகர்களே அதிகம்.
இப்படி தெலுங்கில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. இவர் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்த பிரம்மபுதரடு என்ற திரைப்படத்தின் மூலம் வில்லனாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இப்படி தொடர்ந்து படங்களில் நடித்ததன் மூலம் பல முன்னணி நடிகர்களுக்கும் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார், இப்படி பால கிருஷ்ணன், வெங்கடேஷ், நாகசைதன்யா போன்றோருக்கும் வில்லனாக நடித்திருக்கிறார். தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.
தமிழில் இன்று முன்னணி நடிகராக இருக்கும் அஜித்துக்கு அப்பொழுதே அஞ்சிநேய திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதன் பின்பு பல காமெடி வில்லன் கதாபதிரங்களில் நடிக்க தொடங்கியா இவர் தமிழில் தனுஷ் நடித்து வெளியான உத்தம புத்திரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி இறுதியாக சரிலேறு நீக்கெவ்வரு என்ற மகேஷ் பாபுவின் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படி லாக்டவுனில் தனது குடும்பத்துடன் நாட்களை கழித்து வந்த இவருக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. இந்த செய்தியினை அறிந்த தெலுங்கு திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது இப்படி அவரது மறைவிற்கு தெலுங்கு திரையுலகின் ரசிகர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.