தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்திருப்பதோடு பல முன்னணி சினிமா பிரபலங்களைஎ தனக்கு ரசிகர்களாக வைத்து இருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தல என எல்லாராலும் செல்லமாக அழைக்கப்படும் அஜித்குமார் அவர்கள். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தானாக சினிமாவில் நடிகராக நடித்து மக்கள் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை இன்றளவும் பிடித்து வைத்துள்ளார். மேலும் இவரது நடிப்பை தாண்டி இவர் பைக் ரேஸ், கார் ரேஸ் மற்றும் பல திறமைகளை உள்ளடக்கியவர்.

இதனை தொடர்ந்து இவரது நடிப்புக்கு ரசிகர் கூட்டம் ஒரு பக்கம் இருக்க இவரது இயல்பான குணம் மற்றும் சிம்பிளிசிட்டிக்கு இருக்கும் மக்கள் ரசிகர்கள் தான் அதிகம். இந்நிலையில் இவரது படங்கள் என்றாலே திரையரங்குகளில் கூட்டம் அலைமோதி தள்ளும் மேலும் இவருடன் ஒரு காட்சியிலாவது நடித்து விட மாட்டமோ எனும் ஏங்கும் நடிகர் நடிகைகள் ஏராளம். இப்படி இருக்கையில் இவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது பிரபல இயக்குனர் எஸ்.ஜே, சூர்யா இயக்கத்தில் தல அஜித் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து கலக்கிய வாலி திரைப்படம். இந்த படத்தில் அஜித் அவர்கள் ஹீரோ வில்லன் என இரு மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார்.

இந்த படம் இன்றளவும் மக்கள் மத்தியில் பெரிதளவில் பார்க்கபடுவதோடு பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல முன்னணி நடிகை சிம்ரன் அவர்கள் நடித்து இருந்தார். இவ்வாறு இருக்கையில் இந்த படம் வெளியாகி பல வருடங்கள் ஆன நிலையில் இந்த படத்தின் சில தகவல்கள் குறித்து பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அவர்கள் கூறி இருந்தார். அதில் இந்த படத்தில் முதலில் ஹீரோயினாக நடித்தது பிரபல நடிகை கீர்த்தி ரெட்டி தான்.

மேலும் இவரை ஒப்பந்தம் செய்து படபிடிப்பு வேலைகளும் நடந்தது ஏனோ சில காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்காமல் முடியாமல் போனதால் இவருக்கு பதிலாக சிம்ரன் நடித்து இருந்தார். இருப்பினும் கீர்த்தி ரெட்டி தமிழில் தேவதை எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி தளபதி விஜயுடன் நினைவிருக்கும் வரை, இனியவளே போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல் பல வருடங்கள் கழித்து இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here