தென்னிந்திய திரையுலகில் எத்தனையோ புதுமுக நடிகைகள் வந்த வண்ணம் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சில படங்களில் நடித்த பிறகு அவ்வளவாக மேற்கொண்டு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழப்பதோடு மக்கள் மத்தியில் நினைத்த அளவு வரவேற்பும் கிடைப்பதில்லை. இதனால் பல நடிகைகள் வந்த இடம் தெரியாமல் போனவர்களும் இருக்கிறார்கள் மேலும் பல நடிகைகள் வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமாகி உள்ளார்கள். அந்த வகையில் தமிழில் கடந்த 2012-ம் ஆண்டு பிரபல இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் ஜீவா நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையாக உருவானது முகமூடி திரைப்படம். இந்த படத்தின் மூலம் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே.

இவர் ஆரம்பத்தில் தனது கல்லூரி படிப்பை மாடலிங் பிரிவில் பணியாற்றி வந்தார். இதை தொடர்ந்து பல விளம்பர படங்களிலும் நடித்துள்ள இவர் அதன் மூலம் பிரபலமாகி இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. இதன் காரணமாக இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. அதை தொடர்ந்து மேலும் திரைபடங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அவ்வளவாக வராத நிலையில் இவர் தெலுங்கு திரையுலகில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். இந்நிலையில் தெலுங்கில் கடந்த 2014-ம் ஆண்டு பிரபல நடிகர் நாகசைதன்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற  ஒக்க லைலா கோஷம் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானதோடு திரையுலகிலும் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.

அதை  தொடர்ந்து தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதோடு நிறுத்தாமல் ஹிந்தி திரையுலகிலும் தனது கால் தடத்தை பதித்தார். இதன் மூலம் ஹிந்தி , தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருவதோடு முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவ்வாறான நிலையில் சமீபத்தில் தமிழில்   தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள  மாபெரும் வெற்றி படமாக அமையவுள்ள தளபதி 65  படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் மீண்டும்  தமிழ் மக்களிடையே தன்னை அடையாளப்படுத்தி கொள்ள உள்ளார்.

இப்படி இருக்கையில் தற்போதுதிரைப்படங்களில்  கதாநாயகியாக நடிப்பதற்கு 5- கோடி தனது மார்கெட் விலையை ஏற்றியுள்ளாரம் பூஜா. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் பிரபல நடிகரான பிரபாஸுடன் இணைந்து ராதேஷ்யம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு இளம் நடிகரான அகில் நாகர்ஜுனவுடன் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர் எனும் படத்தில் இதுவரை யாரும் நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அந்த படத்தில் ஸ்டான்ட் ஆப் காமெடியனாக நடித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here