தென்னிந்திய அளவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவராகவும் முன்னணி நடிகர்களில் முதன்மையானவராகவும் வலம் வருபவர் எல்லாராலும் செல்லமாக தளபதி என அழைக்கப்படும் தளபதி விஜய் அவர்கள். இவரது நடிப்புக்கு பட்டி தொட்டி முதல் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிகர் பட்டாளம் அதிக அளவில் உள்ளது . மேலும் மக்களை தாண்டி திரையுலகிலேயே இவரது நடிப்புக்கு பல நடிகர் நடிகைகள் ரசிகர்களாக உள்ளார்கள். இப்படி இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரது பிறந்தநாள் விழா அவரது ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடபட்டது. இந்நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் தளபதி அவர்கள் தற்போது நடித்து வரும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

மேலும் தளபதி 65படத்தின் தலைப்பும் வெளியானது. அனைவரும் அந்த தலைப்பு டார்கெட் என இருக்கும் என எண்ணிய நிலையில் அதற்கு மாறாக பீஸ்ட் என அந்த படத்திற்கு தலைப்பு வைத்து இருந்தனர் பட குழுவினர். மேலும் இந்த படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் அவர்கள் இயக்குகிறார் மற்றும் பிரபல பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வெளியிட உள்ளனர். தளபதி இதுவரைக்கும் ஆங்கில தலைப்பில் லவ் டுடே, ஒன்ஸ் மோர், பிரண்ட்ஸ், மாஸ்டர் என நான்கு படங்கள் நடித்துள்ளார் இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பும் ஆங்கிலத்தை மையமாக வைத்து வெளியாக உள்ளது.

பீஸ்ட் என்றால் தமிழில் அபரிவிதமான பெரிய மிருகம் என அர்த்தமாம் மேலும் அடக்கமுடியாத மனிதர்களை பீஸ்ட் என அழைப்பார்களாம். இப்படி இருக்கையில் இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் பிரபல முன்னணி இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . அதேபோல் ஸ்டன்ட் காட்சிகளை கவிதை படத்தில் பணியாற்றிய அன்பறிவு இரட்டையர்கள் அமைத்து இருக்கிறார்கள்.

மேலும் நடன இயக்குனர் ஜானி இந்த படத்திற்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார் . இந்நிலையில் இவர்களை தவிர படங்களில் பணிபுரியும் மற்றஅவர்களை பற்றிய விவரங்களை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. இந்த வகையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் யோசித்து வரும் நிலையில் ஐந்து நடிகர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த படத்தில் வில்லனாக அருண் விஜய், இயக்குனர் செல்வராகவன், பேட்ட பட வில்லன் பாலிவுட் நடிகர் நவாசுதீன் ,துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜம்மால், பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் ஆகிய இந்த ஐந்து நடிகர்களின் பெயர்கள் இந்த படத்தில் வில்லனாக நடிக்க படக்குழு பரிந்துரை செய்து வருகிறது. இந்நிலையில் இதில் யார் தளபதி விஜய்க்கு யார் வில்லனாக நடிக்கலாம் என உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here