தென்னிந்திய சினிமாவில் சின்னதிரையில் இருந்து எத்தனையோ நடிகர் நடிகைகள் வெள்ளித்திரையில் ஜொலித்து வருகின்றனர். இவர்களை போலவே சின்னத்திரை இயக்குனர்களும் வெள்ளித்திரையில் தன் திறமையை காட்டி வருகின்றனர்.அந்த வகையில் 2018-ம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா எனும் நகைச்சுவை திரைபடத்தை இயக்கியவர் நெல்சன் திலிப்குமார். இந்த படம் இவரது திரைபயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒல்லி பெல்லி, ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் விஸ் கேர்ல்ஸ், சூப்பர் சிங்கர், பிக்பாஸ் போன்ற தொடர்களை இயக்கி வந்த நெல்சன் இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பிரபல இயக்குனரானார்.

மேலும் இவரது முதல் திரைப்படம் சிம்பு மற்றும் ஹன்ஷிகா நடிப்பில் எடுக்கப்பட்ட வேட்டை மன்னன் தான். சில காரணங்களால் அந்த படம் இன்னும் வெளியாகமல் உள்ளது.இந்நிலையில் தான்  கோலமாவு கோகிலா திரைப்படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் இதை தொடர்ந்து சிவகர்த்திகேயனை வைத்து டாக்டர் எனும் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் 65-வது படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவ்வாறான நிலையில் சமீபத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் நெல்சன் தன் குடும்பத்துடன் கலந்து கொண்ட. மேலும் அந்த திருமணத்தில் சிவகார்த்திகேயன் அவர்களும் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இரு குடும்பத்தினரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைபடம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.

மேலும் நெல்சன் அவருக்கு இவ்வளவு அழகான குடும்பம் இருப்பது தெரியாமல் இருந்த பொழுது அவரது குடும்பத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் அவரது முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வரும் நெல்சன் திரையுலகில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கொட்டி தீர்த்த வண்ணம் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here