பொதுவாக திரைபடங்களில் நடிகர் நடிகைகளின் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு பிரபலமாகிறதோ அதை காட்டிலும் இருமடங்கு அந்த படங்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் மக்கள் மனதில் பெரிதளவில் இடம் பிடித்து விடுகின்றனர். காரணம் படங்களில் இவர்களது வெகுளித்தனமான நடிப்பும் குழந்தைத்தனம் மாறாத பேச்சும் மக்களை பெரிதளவில் கவர்வதோடு இவர்களது கதாபாத்திரத்தை மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடிக்க வைக்கிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரும் மாபெரும் ரசிகர் பட்டளாத்தையும் வைத்திருப்பவர் தளபதி விஜய் அவர்கள். இப்படி இருக்கையில் 2007-ம் ஆண்டு விஜய் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட திரைப்படம் அழகிய தமிழ்மகன்.

இந்த படத்தில் விஜய் முதன் முறையாக இரு வேடங்களில் நடித்து இருந்தார். மேலும் இந்த படத்தில் ஒரு விஜய் ஹீரோவாகவும் இன்னொரு விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தும் கலக்கி இருப்பார்கள். இருப்பினும் முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் அந்த கதாபாத்திரம் மக்களிடையே பலத்த வரவேற்பை பெறவில்லை. மேலும் இந்த படம் ஹாலிவுட் சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற பைனல் டேஷ்டினேசன் படத்தின் சாயலாக வைத்தே இந்த படம் உருவானது எனலாம்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாதியில் அனைவரது மனதையும் கவர்ந்தது நிவேதிதா எனும் குழந்தை நட்சத்திரம் தான். தன்னுடைய துள்ளலான நடிப்பாலும் நகைச்சுவையான பேச்சாலும் மக்கள் மனதில் பலத்த வரவேற்பை பெற்றது.மேலும் இவர் இந்த படத்திற்கு முன்பே மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை பல படங்களில் நடித்துள்ள இவர் 2009-ம் ஆண்டுக்கு பிறகு எந்தபடங்களிலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் இவர் அந்த ஆண்டிற்கு பிறகு துபாயில் சென்று செட்டில் ஆகிவிட்டார் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இப்படி இருக்கையில் 20-வயதான நிவேதிதாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. இந்த புகைபடத்தை பார்த்த அவரது ரசிகர்கள் குழந்தையாக நடித்த நிவேதிதாவா இது என வாயடைத்து போயுள்ளனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here