தென்னிந்திய சினிமாவில் பல இளம் நடிகர்கள் வந்த போதிலும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பதோடு பல சினிமா [பிரபலங்களை தனக்கு ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள் . தமிழ் திரையுலகில் வளர்ந்த நடிகர்களில் இவர் ஒரு மிகப்பெரிய பிரபலமான நடிகர் ஆவார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். இவருக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா,ஜப்பான், ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர்.

இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளாவிலும் இவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் ரசிகர்கள் இவர் பெயரில் ரசிகர் மன்றங்கள் வெய்து அதில் ஏழை எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர் இளையதளபதி விஜய்யின் பெயரில் இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன. இவர் 1974-ஆம் ஆண்டு ஜூன் 22 அன்று சென்னையில் பிறந்தார். இவர் மனைவி பிரிட்டனில் பிறந்த இந்து இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 25 ஆகஸ்ட், 1999 அன்று மணந்தார்.

இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறித்தவம் ஆகிய இரு முறைப்படியும் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரின் குழந்தைகல் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் இவரது மகள் திவ்யா ஷாஷா. இவரது மகள் திவ்யா சாஷா தெரி என்ற திரைப்படத்தில் ஓர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இளையதளபதி விஜய்யின் மகளான திவ்யா ஷாஷா வெளிநாட்டில் படித்து வருகின்றார். இவர் ஒரு பால் பாட்மிண்டன் விளையாட்டு வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது வெளிநாட்டில் படிக்கும் இந்த திவ்யா ஷாஷா தனது சக மாணவிகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட விஜய்யின் ரசிகர்கள் விஜய்யின் மகள் இவ்வளவு வளர்ந்து விட்டாரா என்று தங்களது கருத்துகளை சமூக வலைதலங்களின் மூலம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here