தம்பி படம் எப்படி இருக்கு -திரை விமர்சனம் !!

1379

தொலைந்துபோன தம்பியை தேடும் ஒரு பாச போராட்டம் தான் தம்பி படத்தின் கதை..இதில் இருக்கும் சுவாரசியம் கலந்து இறுதியில் ஒரு ட்விஸ்ட் வைத்து இயக்குனர் நம் எல்லாரையும் அச்சிரியப்பட வைத்துள்ளார்.

இதில் கார்த்தி ஜோதிகா மற்றும் சத்யராஜ் நடித்துள்ளார்.இதில் மேட்டுபாளையம் தொகுதியில் பெரும் கட்சி பொருப்பில் உள்ள சத்யராஜ் அவர்கள் செய்யும் வேலைகள் தான் குடும்பத்தை நல்ல படியாக பார்த்து கொள்ள வேண்டும் .இதில் சிறுவயதிலேயே தனது மகனை தொலைத்து அதில் இந்த குடும்பம் பெரும் சோகத்தில் வாழ்ந்து வருகிறது.இதை அடுத்து தனது தம்பியை இழந்த சோகத்தில் ஜோதிகா அவர்கள் பிரிவால் வாடுகிறார்.

15ஆண்டுகள் கழித்து தனது தம்பியை கண்டு பிடித்த அக்கா மற்றும் தனது மகன் கிடைத்த அப்பா மற்றும் அம்மா அவர்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் தான் கதை களமாக கொண்டது தான் இந்த படம்.

 

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வைத்து நம்மை யோசிக்க வைக்கிறது இந்த படம். கிளைமாக்ஸ்யில் வரைக்கும் நம்மை ரசித்து பாக்க வைக்கும் இப்படம்.கார்த்தி தனது கொமெடி கலந்த எதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் .ஜோதிகா பற்றி நமக்கு தெரியாத விஷயம் இல்லை அவர்கள் தனது நடிப்பை அற்புதமாக வெளிகாட்டியுள்ளார்.இப்படத்தை கண்டிப்பாக திரையரங்கு சென்று பார்ப்பது இன்னும் நம்மை விறு விருப்பை ஏற்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here