வாடா உயந்திய மொழிகளில் சந்தேகத்துடன் தொடங்கப்பட்டு வெற்றிபெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். வெளிநாடுகளில் பிக்பிரதர் என்ற பெயரில் தொடங்கப்பட்டு மிகப்பெரிய வெற்றிபெற்ற இந்த டிவி நிகழ்ச்சி, இந்தியாவில் முதன் முதலில் இந்தியில் அறிமுகமானது, இப்படி அறிமுகமான முதல் சீசனே மிகப்பெரிய வெற்றி, அதனை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை எப்படியாவது ஒளிபரப்ப வேண்டும் என முடிவு செய்து இங்கு முதல் சீசனை வெற்றிகரமாக தொடங்கியது அந்த நிறுவனம் மற்றும் நிகழ்ச்சிக்குழு.
இப்படி தமிழில் யாரும் நினைத்துப்பார்க்காத அளவுக்கு முதல் சீசன் மிகப்பெரிய வெற்றி . பல சர்ச்சைகளில் சிக்கினாலும் இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பெருசுகள் இளசுகள் பெண்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்தனர். நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் கமல் வந்ததில் இருந்தே இது போல நிகழ்ச்சியை பார்க்க விரும்பாதவர்கள் கூட பார்த்து மகிழ்ந்தனர். இப்படி முதல் சீசனில் மாடலிங் துறையியல் இருந்து வந்த ஆரவ் என்பவர் வெற்றி பெற்றார்.
இப்படி முதல் சீசன் வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் வெளிவர தொடங்கியது, பிரபலங்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் பலரும் இன்றுவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயக்கம் தெரிவிக்கின்றனர், ஏனெனில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவற்றின் செயல்கள் தவறாக புரிந்துகொள்ளப்படுமோ என எண்ணுகிறார்கள்.
இப்படி லாக்டவுன் காரணமாக இந்த வருடம் தள்ளிபோடபட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, அரசி பல தளர்வுகளை அறிவித்த நிலையில் மீண்டும் தொடங்கவிருக்கிறது, இதைக்கண ப்ரோமொக்களும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி இந்த முறை பல பிரபலங்களும் கலந்துகொள்ளவிருக்கும் நிலையில் இந்த முறை டிக் டாக் புகழ் கவர்ச்சி நடிகை இளக்கியா கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரிடம் பிக்பாஸ் குழு ஏற்கனவே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்புவிடுத்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மேலும் இவரது புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.