ஊட்டி மல பியூட்டி உன் பேரு என்னமா என்ற பாடலுக்கு ஏற்றார் போல ஊட்டியில் பிறந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கியவர் வாணி போஜன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சின்னத்திரையில் ஒரு பாடலின் மூலம் அறிமுகமாகி பின்னர் படிப்படியாக முன்னணி காதாபாத்திரங்களில் நடித்தார். இவர் பள்ளி பருவத்திலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்ததால் இவரது இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி இவரை சினிமாத்துறைக்கு அனுப்ப எந்தவித கட்டுபாடுகளும் விதிக்கவில்லை. இவர் அறிமுகமானதே தமிழ் சின்னத்திரையில் பெரிய தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஆஹா என்ற தொடரின் மூலம்.
பின்பு படிப்படியாக முயற்சி செய்து முன்னணி காதாபாதிரன்களிலே இனி நடிக்கபோவது என முடிவு செய்து ஜெயா தொலைக்காட்சியில் மாயா என்ற தொடரில் நடித்து வநதார். இத்தனை தொடர்களிலும் நடித்திருந்தாலும் இவர் பேரும் புகழும் அடைந்தது என்னவோ சன் தொலைக்கட்ச்சியில் தான். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வ மகள் தொடரில் முக்கிய காதாபதிரத்தில் நடித்தான் மூலம் தமிழகத்தில் அனைவரது மனதிலும் இண்டம் பிடித்துவிட்டார். இவர் இந்த தொடரில் நடிததர்க்காக கடந்த மூன்றுமுறையும் சன் குடும்ப விருதுகளை அள்ளிசென்றார். அதுமட்டுமில்லாமல் கூடியவிரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாவேன் என கூறி இருந்தார் அதே போல இவருக்கு பல பட வாய்ப்புகளும் வந்தன என செய்திகள் வந்தவன்னமிருன்தது.
இதற்கிடையே தற்போது வெளியான ஒ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இது மட்டுமில்லாமல் இவர் நடித்து இன்னும் மூன்று படங்கள் இந்த ஆண்டு வெளிவர இருக்கிறது. சீரியலிலும் கலக்கி தற்போது சினிமாவிலும் கலக்கிகொண்டிருக்கும் பல நட்சத்திரங்களுக்கிடையே வாணி போஜனும் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயற்சி செய்கிறார்.. அதுமட்டுமல்லாமல் தற்போது சினிமாத்துறையை தாண்டி மாடலிங் துறையிலும் தனது கால்தடத்தை பதித்துள்ளார்.அவ்வபோது தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படத்தை பகிர்ந்தவாறு இருக்கும் இவருக்கு லைக்குகள் குவிந்தவன்னமுள்ளது.. கடந்த சில மாதங்களாகவே தனியாக போடோஷூட் எடுத்து முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற முயற்சி செய்து வருகிறார்.
தெய்வமகள் சீரியல் இன்னும் சமூகவளைதள பக்கங்களில் சக்கைபோடு போட்டுகொண்டிருக்கிறது. இவர் இன்னும் பல படங்களில் நடிப்பாரோ இல்லையோ அனால் மக்கள் மனதில் நன்றாக இடம்பிடித்துவிட்டார் இதுவே இவரை தமிழ் சினிமாவில் நல்ல இடத்திற்கு அழைத்து செல்ல உதவும் என நம்பலாம். தற்போது பல விருதுவழங்கும் விழாக்களில் கலந்துகொள்ளும் இவருக்கு திடிரென தெலுங்கு பட வாய்ப்பு கதவை தட்டியுள்ளது. இவர் தெலுங்கில் மீக்கு மாத்ரமே செப்தா என்ற படத்தில் இணைந்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். இந்த படத்தில் என்ன காதாபதிரமென இவர் இதுவரை தெரிவிக்கவில்லை . இருந்தாலும் முக்கியகாதாபதிரமாகதான் இருக்குமென்பது மட்டும் உறுதி. எனவே வாணி போஜன் தற்போது தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வறும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.. இன்னும் சில மாதங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கே ஜோடியாக நடித்தாலும் ஆச்சர்யபடுவதர்க்கு எதுவுமில்லை…