தமிழ் சின்னத்திரை ரசிகர்களை உற்சாக படுத்தும் விதமாக தொலைக்காட்சி நிறுவனங்கள் பல புதிய தொடர்களையும் சில விளையாட்டு நிகழ்சிகள், சில விவாத நிகழ்சிகள் போன்ற பல நிகழ்சிகளை கொண்டு வருகிறார்கள்.அந்த தொடர்கலானது மக்களை பெரிதும் கவர்ந்து அதை பாகம் பாகமாக அடுத்துடுத்து எடுத்து வருகிறார்கள்.

அதே போல் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியும் மக்களை மற்றும் சினிமா பிரபலங்களை ஒரு வீட்டிற்கு நூறு நாட்கள் விளையாட வைத்து அதில் யார் அந்த வெற்றிக்கு தகுதியானவர் என மக்கள் அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து மக்கள் கொண்டடுவார்கள்.

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பிரபல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு மேலும் ஒரு சிறப்பு சேர்த்துள்ளார்.

இந்த ஷோவானது மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து தற்போது மக்கள் மற்றும் பிக் பாஸ் ரசிகர்கள் நான்காவது சீசன் எப்போது தொடங்கும் என்று ஆராவரத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.மேலும் இந்த ஷோவை பற்றி விளக்கம் அளித்துள்ள விஜய்டிவி இந்த நிகழ்ச்சியை வெற்றி பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும் இதை எப்படி நிறுத்த முடியும்.இந்த ஷோ கண்டிப்பாக நடக்கும்.அனால் இந்த கொரோன காரணமாக அரசாங்கம் தற்போது எந்த ஒரு சினிமா துறையும் இயங்க உத்தரவு பிறப்பிக்கவில்லை.

இந்த கொரோன காரணமாக இந்த ஷோ தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து நாங்கள் ஜூன் இறுதியில் ஆரமித்து ஜூலையில் முதலில் ஆரமிக்கலாம் என்று இருந்தோம்.அனால் அது நடக்கவில்லை.மேலும் லாக்டவுன் ஆகஸ்ட் மாதம் முடிவிற்கு வரும் என்று நினைக்கிறோம்.செப்டம்பரில் நிகழ்ச்சியை தொடங்க உள்ளோம் என்று கூறியுள்ளார்கள்.

மேலும் அதில் பங்கு பெரும் நடிகர் மற்றும் நடிகைகளை அரசு விதிமுறை படி கொரோன டெஸ்ட் முடிந்து பிறகு தான் வீட்டிற்குள் அனுப்புவோம் என்று கூறியுள்ளார்கள்.இந்த செய்தி தற்போது பிக் பாஸ் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.