திரைப்படங்களில் நடிகர் நடிகைகளை தாண்டி சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் பல நடிகர்களை மக்கள் நினைவில் வைத்து கொள்வதில்லை. காரணம் அவர்கள் படங்களில் ஒரு சில காட்சிகளிலேயே தோன்றுவதாலும் மேலும் இவர்களுக்கு திரைபடங்களில் முக்கியத்துவம் இல்லாததுமே இதற்கு காரணம். இருப்பினும் தற்போது வரும் திரைப்படங்களில் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அதில் நடிக்கும் நடிகர்கள் அனைவருக்கும் உரிய அளவு  முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்கள் வெளியாவது மக்கள் மத்தியில் பல துணை நடிகர்கள் பிரபலமாகி வருகின்றனர்.

இந்நிலையில் 1985-ம் ஆண்டு பிரபல இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் வெளிவந்த ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நெல்லை சிவா. தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பிரபல நடிகரும் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் அவர்களுடன் இணைந்து தொலைக்காட்சியில் பல தொடர்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது நெல்லைக்கே ஏற்ற பாஷையும் நகைச்சுவையான நடிப்பும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

என் ஆசை மச்சான்,சுயம்வரம்,சீவலபேரி பாண்டி,அன்பே சிவம்,படிக்காதவன் போன்ற பல படங்களில் முன்னணி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் வைகைபுயல் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து இருந்தாலும் வடிவேலு அவர்கள் கிணத்த காணோம் எனும் காமெடிகாட்சியில் போலிஸ் அதிகாரியாக நடித்து மக்கள் மத்தியில் வெகு பிரபலமானார். இதை தொடர்ந்து பல படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி எதிர்பாராதவிதமாக காலமானர். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் குடும்பத்தாரை பெரும் துயரத்தில் கொண்டு சேர்த்துள்ளது.தற்சமயம் திரையுலகில் போதாதா காலமாக தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் காலமாகி வருகின்றனர். இவ்வாறான நிலையில் இவரது மறைவு மென்மேலும் மீளாத்துயரத்தில் ஆளாக்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here