திடிரென தல அஜித்தின் வலிமை படத்திலிருந்து வெளிவந்த பைக் ஸ்டண்ட் காட்சிகள்- இதோ வீடியோ!! ஷாக்கில் படக்குழு!

878

நேர்கொண்ட பார்வை படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அடுத்த படத்திற்க்கான வேலைகள் தொடங்கப்பட உள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவின, அதை உண்மையாக்கும் வகையில் படத்தின் பூஜை வேலைகள் படு தீவிரமாக தொடங்கி பட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் தலைப்பு வலிமை என அறிவிக்கப்பட்டது. நடிகர் அஜித்தின் v என்ற ராசியான தலைப்பாக கருதப்பட்ட நிலையில் ரசிகர்கள் அதனை வரவேற்றனர். இந்நிலையில் மற்ற படங்களுக்கெல்லாம் எதவது அப்டேட் வரும்போது எங்களுக்கு எப்பொழுது அப்டேட் வரும் என தயாரிப்பாளரை ட்விட்டரில் வற்புறுத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்றுவரை எந்தவித அப்டேட்டும் வராத நிலையில் அவ்வபோது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை குஷி படுத்தியது. இநிலையில் கடந்த வாரம் தனது உதவியாளரின் திருமண விழாவில் பங்கு பெற்ற அஜித்தின் புகைப்படம் இணையமெங்கும் வைரலாக பரவியது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.தற்போது வலிமை படத்தின் படபிடிப்புகள் வெகு வேகமாக நடந்துவரும் நில்லையில் தற்போது வரை அறுவது சதவீதத்திற்கு மேல் படபிடிப்பு வேலைகள் முடிந்தது என இயக்குனர் தெரிவித்திருந்ததாக செய்திகள் வலம் வந்தன.

இந்நிலையில் கடந்த வாரம் கூட படபிடிப்பின்போது நடிகர் தல அஜித்திற்கு காயம் ஏற்பட்டதாக படபிடிப்பு தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளிவந்தது, இந்த செய்தி வெளிவந்த பின் சமூக வலைதளங்களில் தல அஜித்தின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். பின்னர் அது கை விரல்களில் ஏற்பட்ட சிறிய காயமென அறிவிக்கபட்டது. இந்நிலையில் இன்று முக்கியமான சண்டை மற்றும் பைக் ரேஸ் காட்சிகள் இன்று படபிடிப்பு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்ததை தொடர்ந்து அதனுடைய புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வெளிவந்தன. இதனை தல அஜித்தின் ரசிகர்கள் அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் டிரன்ட் செய்து வருகின்றனர். இதோ கீழே வீடியோ மற்றும் புகைப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here