வெள்ளித்திரையைக் காட்டிலும் சின்னத்திரையில் வரும் தொடர்கள் அதை ஈடுகாட்டும் அளவில் எடுக்கப்பட்டு வருகிறது.இதில் நடிக்கும் கதாபாத்திரங்கள் எளிதில் மக்கள் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். அதுவும் அதில் வரும் ஒரு சில கதாபாத்திரங்கள் மக்களிடையே பலத்த வனவேற்பை பெறுவதோடு மனதில் நீங்காத இடத்தை பிடித்­துவிடுகின்றனர். அந்த வகையில் சன்டிவியில் 2013-ம் ஆண்டு  ராதிகா சரத்குமார் இயக்கி நடித்த வாணிராணி சீரியலை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். 5 வருடங்களுக்கு மேல் ஓடிய அந்த தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த தொடரில் ராதிகா இருவேடங்களில் நடித்திருப்பார் அதில் ஒரு ராதிகாவுக்கு இருமகள்களும் ஒரு மகனும் இருப்பார்கள்.

அதில் ஒரு மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நேஹா மேனன். 18-வயதான நேஹா கேரள மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சென்னையிலேயே வளர்ந்தவர். இந்நிலையில் சரிகம தயாரிப்பில் டி.கே.எஸ் நிமேஷ் இயக்கத்தில் சுரேஷ்குமார் நடிப்பில் வெளியான பிள்ளை நிலா தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின் பல தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பிள்ளை நிலா, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், வாணி , நிறம் மாறாத பூக்கள் போன்ற பல முன்னனி தொடர்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரையைத் தாண்டி வெள்ளித்திரையிலும் வலம் வந்துள்ள நேஹா அதிலும் தனது நடிப்பத்திறனால் பிரபலமானார்.

ஆர்யா ஹீரோவாக நடித்த யட்சன் மற்றும் ஜாக்சன்துரை,நாரதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜாக்சன் துரை திரைப்படத்தில் இவரது நடிப்பு பாராட்டும் வகையில் இருந்ததோடு மக்தள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இவ்வாறாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நேஹா தற்போது வளர்ந்து ஒரு ஹீரோயின் போல தோற்றமளிக்கிறார்.

தமிழில் தற்போது தமிழ்செல்வி தொடரில் நடித்து வரும் நேஹா சமீபத்தில் போட்டோஷீட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குழந்தை நட்சத்திரமாக பார்த்த நேஹாவை படு மாடர்னான உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸை பார்த்து நம்ம வாணிராணியில் வந்த தேனா இது என வியப்படைந்துள்ளனர். பார்ப்பதற்கு கேரளத்து பைங்கிளி போல தோற்றமளிக்கும் நேஹா திரையில் வரமாலே ரசிகர்கள் மனதை கொள்ளைக்கொண்டு விட்டார் எனலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here