வெள்ளித்திரையில் வெளிவரும் திரைப்படங்கள் எந்த அளவிற்கு பிரபலமோ அதைக்காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதோடு பெரிதளவில் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொடர்களுக்கு எல்லாம் முதன்மையாக விளங்குவது என்றால் அது பிரபல தொலைக்காட்சியான சன் டிவியாக தான் இருக்க முடியும். இந்நிலையில் அந்த காலத்தில் பிரபல தொடராக வலம் வந்தது சித்தி சீரியல் இந்த தொடரில் பிரபல முன்னணி நடிகையான ராதிகா அவர்கள் கதையின் நாயகியாக நடித்து இருந்தார்.

இப்படி இருக்கையில் பல வருடங்கள் கழித்து அதனை கருவாக வைத்து கொண்டு தற்போது ஒளிப்பரப்பாகி வரும் தொடர் வாணி ராணி. இந்த தொடரில் ராதிகா இரு மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்த தொடரில் பல முன்னணி சின்னத்திரை நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள் அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல சீரியல் நடிகர் வேணு அரவிந்த். இப்படி இருக்கையில் சமீபத்தில் இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று விட்டதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இவர் ஆரம்பத்தில் பிரபல முன்னணி இயக்குனர் சிகரமான பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேரம் போன்ற பல முன்னணி தொடர்களில் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இதனை தொடர்ந்து பல முன்னணி தொடர்களில் நடித்துள்ள இவர் தற்சமயம் செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி போன்ற பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் அலைபாயுதே, வல்லவன் போன்ற படங்களில் நடித்துள்ளதொடு சபாஷ் சரியான போட்டி எனும் படத்தையும் இயக்கியுள்ளார்.

இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவருக்கு சமீபத்தில் கொரோனா தோற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். இந்த நிலையில் பலத்த சிகிச்சைக்கு பின் கொரோனவிளிருந்து மீண்ட சில நாட்களிலேயே மூளையில் கட்டி ஏற்பட்டு நிமோனியா வந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றினர். இந்த ஒரு நிலையில்  மூளையில் இருந்த கட்டியை அகற்றிய காரணத்தினாலோ என்னவோ அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதனால் இவரது இந்த நிலையை கண்டு ஒட்டு மொத்த சின்னதிரையினரும் உறைந்து போயுள்ளனர் மேலும் அவர் விரைவில் குணமடைந்து வர பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here