இந்திய சினிமாவிற்கு இந்த வருடம் மிக மோசமான வருடம் என்றே கூறலாம், இந்திய சினிமாவில் பல திரைப்படங்கள் புது பாணியில் இந்த வருடம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த கொரோனாவனது அனைவருக்கும் பயத்தை காட்டியது. அதுமட்டுமல்லாமல் பல திரைபிரபலங்களும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண நடிகர்களுக்கே இந்த நிலையென்றால் திரையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பிரபலங்களையும் இந்த கொரோன விட்டுவைக்கவில்லை என்றே கூறலாம்.
பாலிவூட் சூப்பர்ஸ்டாரான அமிதா பச்சன் மற்றும் அவரது குடும்பத்துக்கே கொரோனா தோற்று உறுதியானது இந்திய திரையுலகிற்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் மற்றும் அவரது மகள் என அனைவருக்கும் பின்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பலருக்கும் இந்த கொரோனா உறுதி செய்யப்பட்டு பலர் இறந்த செய்தியும் தமிழ் திரையுலகை சோகத்தில் தள்ளியது.
இந்நிலையில் சற்றுமுன் நடிகர் விஜய் வசந்தின் தந்தையும் வசந்த் அண்ட் கோ ஓனர் வசந்த் மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்ட செய்தஇ அனைவரையும் சோகத்தில் தள்ளியுள்ளது. விஜய் வசந்த் கூறியதாவது. முதலில் அப்பாவிற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் பின்னர் அம்மாவுக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டது.
பின்னர் இருவருக்கும் கொரோனா உறுதி என மருத்துவமனை நிர்வாகம் கூறிய நிலையில், தந்தை வசந்த் தீவிர சிகிச்சை பிரிவில் நலம் பெற்று வருவதாக கூறி இருக்கிறார். ஆக்சிஜன் சரிவர கிடைக்காததால் வேண்டுலேட்டர் பொருத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அவர் கூறி இருக்கிறார்.