தற்போது சின்னதிரை மற்றும் வெள்ளித்திரைகளில் அதிகளவு பிரபலமாகி ஆதிக்கம் செலுத்தி வருபவர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தான். காரணம் எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் இவர்கள் இல்லாமல் நடைபெறுவது இல்லை. அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருக்கும் இவர்களுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் ஒரு குறிப்பிட்ட பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் தனது சிறு வயதில் இருந்தே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பிரபலமாக இருப்பவர் டிடி எனும் திவ்யதர்ஷினி.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார். திரையுலகை பொருத்தவரை டிடியை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் அந்த அளவிற்கு சுட்டித்தனமான  நடிப்பு மற்றும் நகைச்சுவையான பேச்சால் மக்கள் மற்றும் திரையுலகில் பலரின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் டிடி. இவ்வாறு பிரபலமாக இருக்கும் டிடி தனது நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி சில காலங்களே வாழ்ந்த இவரது குடும்ப வாழ்க்கை சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தது. அதன் பின் தனித்து வாழ்ந்து வரும் டிடி சில வருடங்கள் திரையில் நடிப்பதை தவிர்த்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் தனது பழைய துள்ளலுடன் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வபோது தனது படு மாடர்னான புகைப்படங்களை பதிவிட்டு வைராலாக கூடியவர்.

இவ்வாறன நிலையில் சமீபத்தில் மாலதீவிற்கு சுற்றுலா சென்றிருந்த டிடி அங்கே நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பல்வேறு விமர்சங்களுக்கு ஆளானர். அந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள் மீண்டும் ஒரு புகைபடத்தை தன் இணைய பக்கத்தில் பதிவிட்டு பிரச்சனையில் சிக்கியுள்ளார். அந்த புகைபடத்தில் வெள்ளை  நிற உடையில் உள்ளாடை பளிரென தெரியும் அளவிற்கு உடை அணிந்து அவர் எடுத்திருக்கும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களிடையே பலவிதமான விமர்சனங்களை பெற்று வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here