வெள்ளித்திரையைக்காட்டிலும் சின்னத்திரையில் உள்ளவர்களே தற்போது மக்கள் மத்தியில் பெருமளவு பிரபலமடைந்து  பேசப்பட்டு வருகின்றனர்.நடிகர் நடிகைகளைக்  காட்டிலும் இவர்கள் மக்களின் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுகின்றனர்.அந்த வகையில் டிடி என்கிற திவ்யதர்ஷினியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.ஏனென்றால் தனது சிறுவயதிலேயே தொலைக்காட்சிகளில் நுழைந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் தனக்கென தனி ரசிகர்களை உடையவர் டிடி.தனது கலகலப்பான பேச்சாலும் நகைச்சுவை திறனாலும் டிடி இன்று வரை சின்னத்திரையில் முன்னனி தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.மேலும் இவர் சின்னத்திரை  மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் தனது கால்தடத்தை பதித்துள்ளார்.

இந்நிலையில் இவர்  தனது நீண்ட கால நண்பரான ஶ்ரீ காந்த் ரவிச்சந்திரனை 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு திரைத்துரையில் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என தனது கணவர் வீட்டில் கூறியதன் காரணமாக திரைத்துறையில் நடிப்பதை ஒதுக்கி வைத்திருந்தார்.பின்னாளில் இந்த காரணமாக அவர்கள் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தில் முடிந்தது.அதன்பின் டிடி தனித்தே வாழ்ந்து வருகிறார்.

இப்படி இருக்கையில் கொரோனாவிற்கு பிறகு பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தன் திரைப்பயணத்தை மீண்டும் துவங்கியுள்ளார்.சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் தன்னை டிரெண்டாக வைத்திருக்கும் டிடி சமீபத்தில் தன் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.அதன் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு மக்களிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அதில் தனது பேபி டார்லிங்ஸ் என தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதோடு இல்லாமல் விஜய் டிவியின் புரோகிராம் ஹெட்டை இறுக்கமாக கட்டியணைத்தவாறு உள்ள புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் டிடி.

தனது கணவருடன் இல்லாமல் தனித்து வாழ்ந்து வரும் டிடியின் தற்போதைய காதலரும் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுத்த வண்ணம் உள்ளது.இந்நிலையில் அந்த காதலர் யாராக இருக்கக்கூடும் என்று ரசிகர்கள் ஆராயந்து வருகின்றனர்.இந்நிலையில் டிடிக்கு ஏற்ற ஜாடி யாராக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here