தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம் உள்ளதோ அதை காட்டிலும் அதை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு பிரபலம் உள்ளது. அதிலும் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் வரும் தொகுப்பாளர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பெரிதளவில் வரவேற்பை பெற்றுள்ளதோடு வெகு  பிரபலமாக உள்ளார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் பல வருடங்களாக முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என எல்லாராலும் செல்லமாக அழைக்கப்படும் திவ்ய தர்சினி. இவர் தனது சிறு வயது முதல் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து  தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இவரது துடிப்பான நடிப்பாலும் சுட்டித்தனமான பேச்சாலும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளார்.

இவர் சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவ்வாறு திரையுலகில் மிக பிரபலமாக இருக்கும் இவர் தனது நீண்ட நாள் நண்பரான உதவி இயக்குனர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெகு விமர்சையாக நடந்த திருமணம் ஒரு சில வருடங்களே நிலைத்து இருந்தது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வபோது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இதற்கு காரணம் டிடி தினமும் இரவு பார்டிகளுக்கு செல்வதோடு அதிகளவு ஆண் நபர்களுடன் நெருக்கமாக பழகுவதால் தான் எங்களுக்குள் கருத்து வேறுபாடுக்கு முக்கிய காரணம் என்று அவரது முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் கூறியிருந்தார். இதை தொடர்ந்து டிடி தான் செல்லும் சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களில் தொடர்ந்து தன்னை தரைக்குறைவாக நடத்தியதாகவும் கூறியுள்ளார்.இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது முறைபடி பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலைக்கு பிறகு சில காலம் திரையுலகில் வாராமல் இருந்த டிடி தற்போது மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் அவ்வபோது சில காதல் வதந்திகள் இவர் மீது வந்த வண்ணமே உள்ளது. இப்படி இருக்கையில் இவரது முன்னாள் கணவர் என்ன ஆனார் என தெரியாத நிலையில் தற்போது அவர் இணையத்தில் அவர் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைராளாகி  வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான ரம்யா சோ குயிட் என தனது வாழ்த்து கூறி தனது கருத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் டிடி அவர்களை வெறுப்பு ஏற்றுவதற்கா இல்லை அந்த பெண் தான் அவரது இரண்டாவது மனைவியா என பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here