தமிழ் திரையுலகில் சின்னத்திரையில் கலக்கி வரும் சேனல்களில் விஜய் டிவி நிறுவனமும் ஒன்று.தற்போது உள்ள அணைத்து டிவி சேனல்களுக்கும் போட்டியாகவே திகழ்ந்து வருகிறது.இவர்கள் மக்கள் தங்களது சேனலை விரும்பி பார்க்க வேண்டும் என்று புதிது புதிதாக நிகழ்சிகளை கொண்டு வருவார்கள்.அதேபோல் அந்த சேனல்களில் பணிபுரியும் நடிகர், நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்கள் அனைவரையும் மக்கள் மத்தியில் ஒரு பெரும் வரவேற்பு உண்டு.

பிரபல தொகுப்பாளினி ஜாக்லின் அவர்கள் சின்னத்திரையில் முதல் முதலாக கலக்க போவது யாரு மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தான் வசம் வைத்து இருந்தார்.பின்பு படிப்படியாக பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வந்த ஜாக்லின் அவர்களுக்கு சீரியலில் நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.மேலும் இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெளித்திரையிலும் படங்களை நடித்து வருகிறார்.இவரது முதல் படமான கோலமாவு கோகிலா மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

ஜாக்லின் அவர்கள் தனது சமுக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.இவர் அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.அதே போல் தற்போது அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த வியந்து போன ரசிகர்கள்.அந்த புகைப்படத்தில் இவர் சற்று ஒல்லியாக காணப்பட்டார்.இவர் முன்பு குண்டாக இருந்த இவர் தற்போது தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகமான நிலையில் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துகொண்டு வருகிறார்.இதனை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருவது மட்டுமல்லாமல் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
