ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் இந்த கோரோநாவில் இருந்து மக்களுக்கு ஒரு விடிவு காலம் வந்தபாடில்லை, பொதுமக்களும், பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் என பல மதங்களாக வீடுகளுக்குலேயே முடங்கிக்கிடகின்ற்றனர். இதற்கிடையில் பல சினிமா நட்சத்திரங்களும் கொரோனா பதிக்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி பல வாரங்களுக்கு மேல் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த எஸ் பி பி அவர்களும் மாரடைப்பால் காலமானார். இபப்டி இந்த ஆண்டு திரையுலகினருக்கு மோசமான ஆண்டு என்றே கூற வேண்டும்.
சின்னத்திரையில் பல ஆண்டுகளாக மக்களை மகிழ்வித்து வந்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி. கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தமிழ் தொலைக்கட்சிகளில் நுழைந்தவர் அதான் பின்பு பல நிகழ்சிகளில் கலந்துகொண்டு தனது தனித்துவமான காமெடி நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர். இப்படி சிரிச்ச போச்சு நிகழ்ச்சி இவரை அடுத்த கட்டதிர்க்கே அலைத்துசென்ற்றது என்றே கூறலாம். விஜய் டிவியில் ஒளிபரப்பான பல காமெடி நிகழ்சிகளில் முன்னணியில் இருந்து இயக்குனர் தாம்சனுடன் கை கோர்த்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தவர்.
இபப்டி வடிவேல் பாலாஜி மறைந்தது இன்னும் பலராலும் எருகொள்ள முடியவில்லை. செப்டம்பர் 10 தேதி மறைந்த வடிவேல் பாலாஜிக்கு சின்னத்திரை நடிகர்களும், சினிமா நட்சத்திரங்களும், ரசிகர்களும் பொதுமக்களும் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இவருடன் பணிபுரிந்த விஜய் டிவி நட்சத்திரங்கள் பலரும் தான் பணிபுரிந்த அனுபவங்களை வேதனையுடன் தெரிவித்தனர். இந்நிலையில் விஜய் டிவி வடிவேல் பாலாஜி நினைவாக நிகழ்ச்சி ஒன்றை நடத்தி விஜய் நட்சத்திரங்களுடன் அனுபவங்களை கேட்டபோது வடிவேல் பஜஜியின் குரலில் பேசியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.