தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை பொறுத்தமட்டிலும் சின்னத்திரையில் வெளிவரும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வரும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே பெரிதளவில் பிரபலமாக இருப்பதோடு இதன் மூலம் பிரபலமாகி சினிமாவில் பல முன்னணி படங்களில் நடித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு மக்களிடையே விரும்பி பார்க்கபடுகிறதோ அதே அளவிற்கு அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்களிடையே பலத்த வரவேற்பையும் புகழையும் பெற்று வருகின்றனர். இந்த வகையில் இந்த சேனலில் பல தொகுப்பாளர்கள் பேமஷாக உள்ள நிலையில் இவர்களில் ஒருவராக தனக்கென தனி ஒரு அடையாளத்தோடு பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.

தனது இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையான பேச்சாலும் விரைவாக மக்கள் மனதில் இடம் பிடித்ததோடு தனக்கென தவிர்க்க முடியாத தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். சொல்லபோனால் விஜய் டிவியில் இவர் இல்லாத ரியாலிட்டி நிகழ்ச்சிகளே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அந்த வகையில் அவ்வபோது தனது மாடர்ன் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறார்.

இப்படி இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த சகோதர பாசத்தை வெளிபடுத்தும் நிகழ்வு விழாவான ரக்க்ஷா பந்தன் நிகழ்ச்சியில் தனது தம்பியுடம் கொண்டாடிய பிரியங்கா அவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த அவரது இவர் தான் இவருடைய தம்பியா என வாயடைத்து போயுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here