வில்லன் ஆனந்தராஜ் வீட்டில் ஏற்பட்ட சம்பவம் ?? குழப்பத்தில் ரசிகர்கள் !!

928

90-களில் வில்லனாக நடித்து அனைவரயும் தான் பக்கம் இழுத்த நடிகர் ஆனந்தராஜ் வீட்டில் நடந்த துயர சம்பவம்.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.அதிலும் முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அணைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் பல சிரமங்களை கடந்து 1988ஆம் ஆண்டில் ஒருவர் வாழும் ஆலயம் என்னும் படத்தில் வில்லனாக தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.இவர் நடித்த பாட்ஷா படத்தின் வில்லனாக நடித்து இருப்பார்.அந்த படம் மூலம் இவரை சினிமாவின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. இவர் பாண்டிச்சேரியை சேர்ந்த இவருக்கு இளைய தம்பி இருக்கிறார்.தற்போது அவர் கடிதம் எழுதிவிட்டு இறந்துவிட்டார்.அந்த செய்தியை அறிந்த திரையுலகம் மற்றும் சினிமா ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

தனது இளைய தம்பி கனகசபை வயது 55 ஆகும் அவர் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இந்நிலையில் கனகசபை அவர்கள் பெரிய தொழிலதிபர் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் ஏலசீட்டு நடத்தி வருகிறார்.இதில் ஏலசீட்டு நஷ்டதினாலும் மற்றும் சீட்டு போட்டவர்கள் பணத்தை திருப்பி கேட்டதாலும் தன்னால் பணத்தை திருப்பி தரமுடியாமல் போனதாலும் இவர் குளிர்பானத்தில் மாத்திரைகளை கலந்து குடித்துவிட்டார். கனகசபை 50லட்சத்திற்கு மேல் ஏலசீட்டு பணத்தை ஏமாந்து போனதால் இவர் இறந்துவிட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர் இறப்பதற்கு முன்னர் கடிதம் நன்கு பக்கத்திற்கு எழுதி வைத்துள்ளார் .அதில் பல பெயர்களையும் சேர்த்து எழுதியுள்ளார்.அதை கைப்பற்றிய போலீசார் அதில் இருக்கும் அனைவரையும் விசாரிக்க போவதாக கூறியுள்ளனர்.தற்போது ஆனந்தராஜ் அவர்கள் விசாரணை நடந்து வரும் நிலையில் எந்த ஒரு தகவலையும் கூற கூடாது என்று சொல்லிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here