தமிழ் சினிமாவில் திரைபடங்களில் நடிகர் நடிகைகள் என்னதான் மெனக்கெட்டு நடித்தாலும் இவர்களை தாண்டி படங்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெறுவதோடு புகழின் உச்சிக்கு சென்று விடுகின்றனர். அந்த வகையில் அந்த காலம் தொடங்கி இன்றளவு வரை பலர் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து வருகின்றனர். பிரபல நடிகை மீனாவின் மகளான பேபி நைனிகா தொடங்கி பேபி சாரா வரை பல குழந்தைகள் திரைபடங்களில் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இவர்களின் வரிசையில் பிரபல முன்னணி நடிகரான தல அஜித்குமார் அவர்களுக்கு தொடர்ந்து இரு படங்களில் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்தர். இவர் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் போன்ற வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.அனிகா திரையுலகில் முதலில் அறிமுகமானது என்னவோ மலையாளத்தில் கத திருடனும் எனும் படத்தின் மூலமாகத்தான். இதை தொடர்ந்து அந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டும் வகையில் இருந்த காரணத்தால் மேற்கொண்டு பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் அனிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவ்வாறு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா தற்போது வளர்ந்து கதானயகிபோல் தோற்றமளிக்கிறார். நயன்தாராவின் மகளாக நடித்த இவர் இப்போது குட்டி நயன்தாரா என்று சொல்லும் அளவுக்கு அழகாக உள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனிகா அவ்வபோது தனது மாடர்னான புகைப்படங்களை பதிவிட்டு வைராளாகி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் போடோஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை தனது இனைய பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த பலர் இவரை குட்டிநயன்தாரா என புகழ்ந்து வருகின்றனர். இப்படி  இருக்கையில் இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கமென்ட் செய்திருந்தார். இதை பார்த்த அனிகா அவருக்கு எமோஜ் மூலம் பதிலளித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here