தமிழில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஸோவான பிக்பாஸ் தற்போது  நான்கவது முடித்து ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கப் போகிறது என்றால் அதற்கு ரசிகர்களின் வரவேற்பே காரணமாகும்.பிக்பாஸ் தமிழ் மொழியில் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது.மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. ஒன்று அதை தொகுத்து வழங்குபவர் உலக நாயகன் கமல்ஹாசன் அவருக்கு உண்டான பாணியில் இந்த தொடரை வெகு நேர்த்தியாக நடத்துகிறார்.

இன்னொன்று பிக்பாஸின் குரல்.பிக்பாஸ் பிரபலமடைய இந்த குரலும் ஒரு காரணம் எனலாம்.இந்த குரலுக்கு சொந்தகாரர் யார் என்று பிக்பாஸ் சீசன் 1- லிருந்து இப்போது வரை தெரியமால் குழம்பி வருகின்றனர்.இவ்வாறு இருக்கையில் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகி வரும் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடிக்கும் அமித் தான் என்று ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.ஆனால் அது பொய்யான தகவல் என வெகு விரைவிலேயே தெரிய வந்தது.அதன் பின் அந்த குரலுக்கு யார் தான் சொந்தக்காரர் என புலம்பிக் கொண்டிருந்த போது மானாடா மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த கோகுல்நாத் தான் அது என தகவல்கள் வெளியாகின.

இறுதியில் அதுவும் வதந்தி என தெரிந்ததும் மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.அப்படி என்ன அந்த குரலில் உள்ளது எனக் கேட்டால் 100 நாட்கள் போட்டியாளர்களை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பது இந்த குரல் தான்.தற்போது ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ்சீசன் 4 போட்டியாளராக கலந்து இரண்டாவதாக வந்த பாலா இந்த குரலுக்கு உரிமையாளரை அடையாளம் காட்டியுள்ளார்.ட்விட்டரில் வெளியான நபரின் வீடியோ ஒன்றிற்கு “என்ன அண்ணா எப்படி இருக்கீங்க” என ரீ ட்வீட் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவில் வருபவர் தான் பிக்பாஸ்  குரலுக்கு சொந்தக்காரர் என இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இருந்த போதிலும் இந்தி திரைப்படமான மஞ்சுநாத் படத்தில் நடித்த சாஸோ சதியிஷ் சாரதி தான் பிக்பாஷ் குரலுக்கு சொந்தக்காரர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த வீடியோவும் பாலாவின் ட்வீட்டும் உள்ளது. இருந்த போதிலும் பிக்பாஸ் நிர்வாக வட்டாரங்கள் அந்த குரலின் சொந்தகாரரை ரகசியமாகவே வைத்துள்ளனர்.இதுவும் நல்லது தான் அது யாருன்னு தெரிஞ்சா நம்ம போட்டியாளர்கள் அவருகிட்டயும் அன்பு தான் ஜெயிக்கும்னு சண்டை போட்டாலும் போடுவாங்க..

 

View this post on Instagram

 

A post shared by sasho (@sashospace)

 

View this post on Instagram

 

A post shared by sasho (@sashospace)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here