தற்போது சின்னத்திரை நிகழ்சிகளும் தொடர்களும் திரைப்படங்களை விட தனக்கென ஒரு முத்திரையை பதித்து மல்க்களிடையே நல்ல வரவேற்ப்பை பெறுகின்றன. இப்படி தற்போது திரைபபட நடிகர்களை விட இந்த சின்னத்திரை சீரியல் நடிகர்களும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் மக்களிடையே அதிக பிரபலம் அடைந்து வருகின்றனர். இப்படி இந்த தொலைக்க்ட்சிகளும் பல புது புது நிகழ்சிகளையும் தொடர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படி லாக்டவுன் காரணமாக பல சின்னத்திரை நிகழ்சிகளும் தொடர்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில்,
இந்த மாதம் தான் பல பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கும் தளர்வுகளை அரசு அறிவித்த நிலையில் மீண்டும் சீரியல் தொடர்களும் நிகழ்சிகளும் தொடங்கப்பட்டன. இப்படி தற்போது புத்தம் புது எபிசோடுகளை ஒளிபரப்பி மீண்டும் ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறது. இந்நிலையில் பொது மக்கள் தான் லாக்டவுனை பயன்படுத்தி திருமணம் செய்து வருகிறார்கள் என்றால் இந்த் சின்னத்திரை பிரபலங்களும் நடிகர்களும் இந்த லாக்டவுனில் தங்களது காதலன் மற்றும் காதலிகளுடன் திருமணத்தை நடத்தி முடித்து வருகின்றனர்.
இப்படி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பல வெற்றிபெற்றுவரும் தொடர்களில் தற்போது இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்து வரும் தொடர் யாரடுய் நீ மோகினி. இந்த தொடரில் ஏற்கனவே முகம் தெரிந்த பல சின்னத்திரை நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள், இபப்டி இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் வெகு காலமாக நடித்து மக்களை கவர்ந்து வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி.
இப்படி சைத்ரா ரெட்டிக்கு ஒளிப்பதிவாளருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது, நெருங்கிய உறவுயனர்களும் நண்பர்களும் மட்டுமே இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது, மேலும் இவர்களுக்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.