திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களை காட்டிலும் நடிகைகள் வெகுவாக ரசிகர்களை தங்கள் அழகான தோற்றதால் கவர்ந்து விடுகின்றனர். இருப்பினும் திரையுலகில் தொடர்ந்து பல இளம்வயது நடிகைகள் புதுவிதமாக வந்த வண்ணம் இருப்பதால் இவர்கள் ஒரு சில படங்களிலேயே காணாமல் போகும் நிலை உருவாகி வருகிறது . இதன் காரணமாக 90-காலத்தில் நடித்த பல நடிகைகள் பல முன்னணி நடிகர்களுடன் நடிந்திருந்த போதிலும் இவர்கள் அவ்வளவாக சினிமாவில் தொடர்ந்து பயணிக்க முடிவதில்லை. மேலும் நடிகர்களை போல திருமணத்திற்கு பிறகும் எத்தனை வயதானாலும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருவது போல் நடிகைகளால் தொடர்ந்து ஹீரோயின்களாக நடிக்க முடிவதில்லை.

இந்நிலையிலேயே பல முன்னணி நடிகைகள் பல வெற்றி படங்களில் நடித்து இருந்த போதிலும் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயுள்ளனர். அந்த வகையில் கடந்த 2002-ம் ஆண்டு பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் யூத். இந்த படம் அந்த ஆண்டின் சிறந்த படமாக அமைந்ததோடு மாபெரும் வசூல் சாதனையையும் படைத்தது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சந்தியா எனும் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றவர் சாஹீன் கான் .

மும்பையை பிறப்பிடமாக கொண்ட போதிலும் இவர்கள் குடும்பம் தமிழை அடிப்படையாக கொண்டவர்களே. இந்நிலையில் இவர் தனது பள்ளி பருவத்திலேயே மாடலிங்கில் ஆர்வம் கொண்டு பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பேர் அண்ட் லவ்லி விளபம்ரம் மக்கள் மத்தியில் இவருக்கு பலத்த வரவேற்பை பெற்று தந்தது . இதை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் முதன் முதலாக கடந்த 2001-ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த வெற்றி படமான நவ் தவலு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து தமிழில் யூத் படத்தில் கதாநாயகியாக நடித்தார் . இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். யூத் படத்தை தொடர்ந்து தமிழில் பல பட வாய்ப்புகள் வந்த போதிலும் இவர் நல்ல கதையாக இருந்தால் தான் நடிப்பேன் என பல பட வாய்ப்புகளை தவிர்த்து விட்டார் .இதன் பிறகு அவ்வளவாக படங்களில் நடிக்காமல் இருந்த இவர் மும்பையை சேர்ந்த தக்வீம் ஹாசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்களுக்கு ஆலம் கான் ஒரு மகனும் உள்ளார். திருமணத்திற்கு பிறகு முழுவதுமாக நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு தன் குடும்பத்தை கவனித்து வருகிறார். இந்நிலையில் இவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது .

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here