டி டி எப் வாசன் கை கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி …… வெளியான வீடியோ காட்சிகள் …..

79

தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமாவை விட சோசியல் மீடியா தளத்தில் இருப்பவர்கள் தான் அதிகம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள் எனலாம். அந்த வகையில் யூடுப் மூலமாக பலரும் இன்றைக்கு பலரும் தங்களை வெகுவாக பிரபலபடுத்தி வரும் நிலையில் பைக் ட்ரிப் மற்றும் மனிதாபிமான செயல்கள் மூலமாக பல இளைஞர்களையும் தனது ரசிகர்களாக மாற்றி கொண்டவர் யூடுப் முன்னணி பிரபலம் டிடிஎப் வாசன்.  இந்நிலையில் தொடர்ந்து பல இடங்களுக்கு பைக்

ட்ரிப் மூலமாக சென்று அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டு அதன் மூலமாக பிரபலமான இவர் அதனை தாண்டி அதிகளவில் சர்ச்சைகளில் சிக்கி அதிலும் பிரபலமாகி இருந்தார் . கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட அதிவேகமாக  பைக்கில் சென்றதாக  அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையடுத்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் இவர் தற்போது திரையுலகில் அடியெடுத்து வைக்கும்

விதமாக மஞ்சள் வீரன் எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் . மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி இருந்தது .  இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் டிடிஎப் வாசன் விபத்தில் சிக்கியுள்ள பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது . இது குறித்து விசாரிக்கையில் நேற்று அதிகாலை டிடிஎப் வாசன் பொது இடத்தில் பைக்கில்

அதிவேகமாக சென்றது மட்டுமின்றி பைக்கில் வீலிங் செய்ய முயற்சித்த போது எதிர்பாரதவிதமாக கட்டுபாட்டை இழந்த பைக் விபத்துக்கு உள்ளானது . இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் கை எலும்புகள் உடைந்த நிலையில் அவருக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது அதோடு அவர் அவரது நண்பரின் வீட்டில் தங்க வைக்க இருப்பதாக பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது . இது ஒரு பக்கம் இருக்க காவல் துறையினர் டிடிஎப் வாசன் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்துள்ளனர்………………….

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here