ஒழுங்கா நடிக்கவந்த வேலைய மட்டும் பாரு …. சூட்டிங் ஸ்பாட்டில் தனுஷை திட்டிதீர்த்த முன்னணி பிரபலம்….!

1276

தமிழ் சினிமாவில் தற்போது வெளிவரும் படங்களில் காமெடிக்கு பஞ்சம் இல்லை எனும் அளவிற்கு பல காமெடி நடிகர்கள் களமிறங்கி நகைச்சுவையில் கலக்கி வருகின்றனர். இருப்பினும் கடந்த சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் இன்றளவும் தனது மார்க்கெட்டை முதலிடத்தில் வைத்திருப்பதோடு பலருக்கும் காமெடியில் சிம்ம சொப்பனமாக இருந்து வருபவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலு அவர்கள். இவ்வாறு இவர் எந்த அளவிற்கு காமெடியில் பிரபலமோ அதை காட்டிலும் சர்ச்சைகளில் சிக்கி கொள்வதில் பிரபலம்

 

எனலாம். அந்த வகையில் இவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படிக்காதவன் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் படபிடிப்பின் போது சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த தனுஷுக்கும்வடிவேலுக்கும் இடையில் சில வாக்குவாதங்கள் எழுந்த நிலையில் அந்த படத்தில் மட்டுமின்றி இனி தனுசுடன் நடிக்க மாட்டேன் என வடிவேலு கூறியதாக பல சர்ச்சைகள் எழுந்தது. இது குறித்து விசாரித்த போது வடிவேலு அந்த படத்தில் நட்டிக்கும்போது ஒரு காட்சிக்கு அதிகளவில் டெக் வாங்கியுள்ளார் இருந்தும் இயக்குனர் அவரை விடாமல் பொறுமையாக அந்த காட்சியை எடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல் கோபமான இயக்குனர் கேமராமேனிடம் சீக்கிரம் எடுங்க நீங்க லேட் பண்ண பண்ணா அவருக்கு சம்பளம் அதிகமாக கொடுக்கனும் என கத்தியுள்ளார். காரணம் வடிவேலு மற்ற நடிகர்களை படத்திற்கு இவ்வளவு சம்பளம்

என வாங்காமல் நாள் கணக்கில் சம்பளம் வாங்கி கொள்வார். இந்நிலையில் இதனை இயக்குனர் ஓபனாக கூறியதால் வடிவேலு மிகுந்த கோபத்துடன் இருந்துள்ளார் அப்போது அவரை சமாதானம் படுத்துவதாக எண்ணி தனுஷ் வடிவேலுவிடம் அண்ணே இயக்குனர் சொல்றபடி கேட்டு நடங்க என கூறியுள்ளார். இதனை கேட்டு எல்லைமீறிய கோபத்துக்கு என்ற வடிவேலு அவரை கடுமையாக முறைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார் அதன் பின்னர் தனுஷை சந்திந்த வடிவேலு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சந்திரமுகி படத்தில் உன் மாமாவுக்கு நான் தான் நடிப்பு

 

சொல்லிகொடுத்தேன் நீ எனக்கு அட்வைஸ் பண்றியா ஒழுங்கா நடிக்கிற வேலையா மட்டும் பாரு என கோபமாக கத்தியுள்ளார். இதன் பின்னர் அந்த படத்தில் வடிவேலு நடிக்கமாட்டேன் என கூறிய நிலையில் அவருக்கு பதிலாக விவேக் அந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் வடிவேலு தனுஷுடன் இனைந்து இதுவரை படங்களில் நடிக்கவில்லையாம் இந்நிலையில் பல வருடங்கள் கடந்த நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது ….

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here