மொதல்ல அவ என்னோட பொண்ணே கிடையாது அப்புறம் எங்க மருமகன் ….. கடும் கோபத்தில் ராஜ்கிரண் போட்ட பதிவு …..

856

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு மத்தியில் தனக்கென தனி அடையாளத்தையும் பிரபலத்தையும் வைத்து இருப்பதோடு இன்றளவும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கம்பீரமாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் ராஜ்கிரண். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாக இணையத்தில் இவரது மகளான ஜீனத் சீரியல் நடிகருடன் காதலித்து ஓடிபோய் திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதனிடையில் இதனால் மிகுந்த கோபத்துக்கு ஆளாகி இருக்கும் ராஜ்கிரண் சமீபத்தில் இணையத்தில் திடுக்கிடும் பதிவு  ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் எனது

மகள் சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக ஒரு தவறான தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் இதன் உண்மைத்தன்மை குறித்து எனது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் விளக்கி கூற வேண்டிய கட்டாயத்துக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். அந்த வகையில் எனக்கு திருமணமாகி திப்பு சுல்தான் என்கிற நைனார் முகமது எனும் ஒர்ரே ஒரு மகன் மட்டும் தான் உள்ளார் அதை தவிர வேறு எந்த குழந்தைகளும் இல்லை. மேலும் எனது மகள் என கூறும் ஜீனத் நான் தத்தெடுத்து வளர்ந்த இந்து மதத்தை சேர்ந்த பிரியா இருப்பினும் அவரது மனதை எந்த வகையிலும் புண்படுத்த கூடாது என்பதற்காக அதனை நாங்கள் எந்த சூழ்நிலையிலும் கூறியது இல்லை. ஆனால் அவரோ தற்போது

சீரியல் நடிகர் சூழ்ச்சி மிகுந்த காதல் வலையில் சிக்கி கல்யாணம் செய்து கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி எனது வளர்ப்பு மகளை அந்த நடிகர் முகநூல் மூலமாக தந்திரமாக பேசி ஏமாற்றி உள்ளார் இப்படி இருந்தும் அவர் எனது வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்ட தகவல் கிடைத்ததை அடுத்து அவர் கூறித்து விசாரிக்கையில் பலரும் கூறியது மகா மட்டமான புத்தியும் பணத்துக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர் என கூறினார்கள். அதேபோல் அவர் எனது மகளை திருமணம் செய்ததும் அவரை நன்கு வாழ வைப்பதற்காக இல்லை எனக்கு இருக்கும்

நல்ல பெயரை பயன்படுத்தி சீரியலில் வாய்ப்பு தேடத்தான். இதை பலமுறை எனது வளர்ப்பு மகளிடம் கூறியும் அவர் இதை காதில் வாங்குவதாக தெரியவில்லை. இதுவே அவர் ஒரு தரமான மாப்பிளையை பார்த்து இருந்தால் நானே சாதி மதம் பார்க்காமல் திருமணம் செய்து வைத்து இருப்பேன். ஆனால் அந்த சீரியல் நடிகர் நயவஞ்சமாக எனது மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார் மேலும் எனது வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்ட ஒருவர் ஒருபோதும் எனக்கு மருமகனாக முடியாது அதேபோல் அவர்கள் இருவருக்கும் எனது குடும்பத்திற்கும் எந்த சம்மதமும் இல்லை என ஆதங்கத்துடன் கூறியுள்ளார்….

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here